தல ரசிகர்களை இப்படி ஒரு இக்கட்டான நிலையில் விட்டுவிட்டாரே சிவா!
சென்னை: இயக்குனர் சிவா கூறிய ஒரு விஷயத்தால் தல ரசிகர்கள் இக்கட்டான நிலையில் உள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. தொடர்ந்து 4 படங்களில் இருவரும் சேர்ந்து வேலை செய்துள்ளனர்.
அப்டேட்ஸ் விஷயத்தில் சிவா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அவர் அப்டேட் கொடுக்காததால் அஜித் ரசிகர்கள் அவர் மீது செம கோபத்தில் உள்ளனர்.

விஸ்வாசம்
சிவாவிடம் அப்டேட்ஸ் கெட்டு கெஞ்சி, கொஞ்சி, கதறி, திட்டியும் பலனில்லை. இதையடுத்து இனி இந்த சிவாவுடன் படம் பண்ணாதீர்கள் தல என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஜித்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். போதும் போதும் இந்த விஸ்வாசத்தோட சிவாவை கழற்றிவிடுங்கள் என்றனர்.

அஜித்
விஸ்வாசம் ட்ரெய்லரை பார்த்த பிறகு சிவா மீதிருந்த கோபம் காணாமல் போய்விட்டது. அப்டேட் கொடுக்காமல் அலைய விட்டாலும் ட்ரெய்லரை மாஸாக கொடுத்திருக்கிறார் சிவா என்று அஜித் ரசிகர்கள் பெருமிதம் கொண்டனர்.

வரம்
4 படங்களில் அஜித்துடன் சேர்ந்து வேலை செய்த சிவா அதை பாக்கியமாக கருதுகிறார். 5வது முறை அஜித்துடன் சேர்ந்து படம் பண்ணும் ஆசையும் அவருக்கு இருக்கிறது. அது நடந்தால் ஒரு வரம் என்று சிவா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்
சிவாவின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இக்கட்டான நிலையில் உள்ளனர். ட்ரெய்லரை பார்த்த பிறகு மீண்டும் சிவாவுடன் சேர வேண்டாம் என்று கூற அவர்களுக்கு மனம் இல்லை. அதே சமயம் மறுபடியும் சிவாவுடனா என்றும் குழப்பத்தில் உள்ளனர். நீங்கள் குழம்ப வேண்டாம், தல பார்த்துக்குவாரு ரசிகாஸ்.


Click it and Unblock the Notifications











