கனடாவை தொடர்ந்து சென்னையிலும் கலைநிகழ்ச்சி.. ரசிகர்களுக்கு பதில் சொன்ன ஷிவாங்கி!

சென்னை : நடிகை ஷிவாங்கி கிருஷ்ணகுமார் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

குறிப்பாக இவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறப்பாகவே அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் 2வது மற்றும் 3வது சீசன்களில் இவர்கள் சிறப்பாக பங்கேற்றார்.

சூப்பர் சிங்கர் மூலம் தன்னுடைய பாட்டுத் திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்திய ஷிவாங்கி தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.

நடிகை ஷிவாங்கி

நடிகை ஷிவாங்கி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் தன்னுடைய கேரியரை துவங்கினார் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி அனைவரையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் இவரது குழந்தைதனமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் ரசிகர்களின் உள்ளத்தை இந்த நிகழ்ச்சி மூலம் வென்றார்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2வில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதை மிகச்சிறப்பாக செய்து அனைவரையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை வேறு லெவலில் கவர்ந்தது. தொடர்ந்து பல வித்தியாசமான கெட்டப்புகள் முயற்சிகளையும் செய்தார்.

குவியும் பட வாய்ப்புகள்

குவியும் பட வாய்ப்புகள்

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஷிவாங்கியும் முக்கியமான காரணமாக அமைந்தார். இதையடுத்து இந்த நிகழ்ச்சி அவருக்கு பட வாய்ப்புகளையும், சீசன் 3க்கான வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

டான் படத்தில் ஷிவாங்கி

டான் படத்தில் ஷிவாங்கி

படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார் ஷிவாங்கி. படத்தில் சிவகார்த்திகேயன்மீது க்ரஷ் என்று வெட்கத்துடன் இவர் சொன்னவிதம் ரசிகர்களை ஆஹா போட வைத்தது.தொடர்ந்து காசேதான் கடவுளான உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஷிவாங்கி.

செல்லப் பெண்ணான ஷிவாங்கி

செல்லப் பெண்ணான ஷிவாங்கி

சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை தன்னுடைய வித்தியாசமான கெட்டப் மற்றும் பேச்சால் கவர்ந்தார் ஷிவாங்கி. அனைவருக்கும் செல்லப் பெண்ணாக இந்த நிகழ்ச்சி மூலம் மாறியுள்ளார். அனைவரும் இவரை கொண்டாடி வருகின்றனர். புகழ், பாலா உள்ளிட்டவர்களின் செல்லத் தங்கையாக உள்ளார்.

தொடர்ந்து பாடும் வாய்ப்பு

தொடர்ந்து பாடும் வாய்ப்பு

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இவருக்கு தொடர்ந்து சினிமாக்களில் பாட வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆல்பம் பாடல்களிலும் பாடி வருகிறார். இதில் நடிக்கவும் செய்கிறார். மேலும் இசைக்கச்சேரிகளிலும் பாடும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் இவர் பிரபலங்களுடன் இணைந்து பாடினார்.

கனடாவில் இசைக்கச்சேரி

கனடாவில் இசைக்கச்சேரி

இந்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட வீடியோக்களும் அதிக லைக்ஸ்களை பெற்றன. இதையடுத்து இவர் சென்னையிலும் இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளில் பாடினால் தாங்களும் நேரில் வந்து பார்ப்போம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

சென்னையில் இசைக்கச்சேரி

சென்னையில் இசைக்கச்சேரி

இந்நிலையில் இப்படி கேட்ட ஒரு ரசிகைக்கு ஷிவாங்கி தற்போது பதிலளித்துள்ளார். விரைவில் சென்னையிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி ஷிவாங்கி ரசிகர்களுக்கு கண்டிப்பாக இனிப்பான செய்தியாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X