கனடாவில் அடுத்தடுத்த கச்சேரிகள்.. ரசிகர்களை கட்டிப் போட்ட ஷிவாங்கி!
டொரோன்டோ : நடிகையும் பிரபல பாடகியுமான ஷிவாங்கி தற்போது ராகா ஃபெஸ்ட் என்ற இசை நிகழ்ச்சிக்காக கனடாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் அதிகமான கச்சேரிகளில் பாடி வருகிறார். அதன் வீடியோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கிலேயே ஷிவாங்கி காணப்படுகிறார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் ஷிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி கிருஷ்ணகுமார். முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இடையில் எலிமினேட் ஆனார் சிவாங்கி. ஆனால் ரசிகர்களின் மனதில் இவரை யாராலும் எலிமினேட் செய்ய முடியவில்லை. அவர்களின் இதய சிம்மாசனத்தில் உறுதியான இடத்தை பிடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
சூப்பர் சிங்கர் மூலம் அதிகமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சிவாங்கி, தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மேலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகர் அஸ்வினுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிகளை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

அடுத்தடுத்த சீசன்கள்
அந்த அளவிற்கு இவர்களது சேட்டைகள் காணப்பட்டன. இதையடுத்து தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3யிலும் இடம்பெற்றார் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சி மூலம் பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்திருந்த டான் படம் ரிலீசாகி இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
அடுத்ததாக காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்து வருகிறார். தொடர்ந்து பல படங்களின் பின்னணி பாடல்களையும் பாடி வருகிறார். இசை ஆல்பங்களிலும் இவரை தொடர்ந்து பார்க்க முடிகிறது. இசைக் கச்சேரிகளிலும் பாடி வரும் ஷிவாங்கி தற்போது இசை நிகழ்ச்சிக்காக முதல்முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கனடாவில் இசைக் கச்சேரி
தற்போது கனடாவிற்கு சென்றுள்ள ஷிவாங்கி, அங்கு பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஷிவாங்கி தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளார். மேலும் சமீபத்தில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து வீடியோவையும் ஷிவாங்கி பகிர்ந்திருந்தார்.

எஸ்பிபி சரணுடன் பாட்டு
இதனிடையே தற்போது கனடாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்பிபி சரணுடன் இணைந்து ஷிவாங்கி பாடியுள்ள பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெஞ்சினிலே, சவுக்கியமா போன்ற பாடல்களை ஷிவாங்கி பாடியுள்ளார்.

பாட்டுக்கு ஆட்டம்போட்ட ஷிவாங்கி
சில பாடல்களில் கோரசுடன் இணைந்து பாடிய ஷிவாங்கி, அந்தப் பாடல்களில் மேடையிலேயே நடனத்தையும் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். எஸ்பிபி சரணுடன் இணைந்து இவர் பாடிய சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











