சின்னத்திரை ஜெனிலியா ஷிவாங்கியை இப்படி பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படம்!
சென்னை: விஜய் டிவியின் சமீபத்திய சென்சேஷன் என்றால் அது குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி தான்.
Recommended Video
சூப்பர் சிங்கர் சீசன் 7ல் பாடகியாக கலந்து கொண்டு கலக்கிய ஷிவாங்கி தனது குறும்புத் தனத்தால் தற்போது காமெடி நடிகையாக மாறிவிட்டார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த ஷிவாங்கி பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கேரளா பொண்ணு
25ம் தேதி மே மாதம் 2000ம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் ஷிவாங்கி. அப்பா கிருஷ்ணகுமார் இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அம்மா ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் கர்நாடக சங்கீதத்தில் பிரபலமானவர். இசைக் குடும்பத்தில் பிறந்த ஷிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இப்போ தான் ரசிகர்கள் அதிகம்
சூப்பர் சிங்கரை விட இப்போ தான் ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக கலந்து கொண்டு ஷிவாங்கி அஸ்வின் உடன் இணைந்து செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குழந்தைத் தனமாக இவர் செய்யும் சேட்டைகள் தான் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கி உள்ளது.

சின்னத்திரை ஜெனிலியா
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் ஜெனிலியா நடித்தது போலத் தான் ரியல் லைஃப்பில் ஷிவாங்கி இருக்கிறார் என்பதே ஏகப்பட்ட ரசிகர்களின் கருத்து. சின்னத்திரை ஹாசினி என்றும் சின்னத்திரை ஜெனிலியா என்றும் இவருக்கு ஏகப்பட்ட பட்டப் பெயர்களையும் வைத்து அழைத்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் படத்தில்
குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ் மற்றும் ஷிவாங்கிக்கு சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் டான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூட ஷிவாங்கி கலந்து கொண்டார்.

ஸ்கூல் யூனிஃபார்மில்
சின்மயா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த ஷிவாங்கி சென்னையில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது பள்ளி தோழிகளுடன் ஸ்கூல் யூனிஃபார்மில் ஷிவாங்கி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செம அழகா இருக்கீங்க
ஷிவாங்கியின் பள்ளிப் பருவ புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம அழகா இருக்கீங்க என வர்ணித்து அந்த போட்டோக்களை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் காமெடியில் கண்டிப்பாக ஷிவாங்கி கலக்குவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











