Don't Miss!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
எங்களோட வாழ்க்கை அவ்வளவு ஈசி கிடையாது.. வருத்தத்தை தெரிவித்த சிவாங்கி!
சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானாலும் சிவாங்கியை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
இந்த நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமாகியுள்ளார். ஏராளமான ரசிகர்களும் அவருக்கு கிடைத்துள்ளனர்.
இதையடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் டான் படம் வெளியானது.
என்னை பற்றி ஏன் பேசுறீங்க.. ட்விட்டரில் விமர்சித்த நபருக்கு.. சரியான பதிலடி கொடுத்த சிவாங்கி!

நடிகை சிவாங்கி
விஜய் டிவியின் முக்கியமான நபராக காணப்படுகிறார் சிவாங்கி. சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தன்னுடைய குரலால் அனைவரையும் கவர்ந்தார். இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக பங்கேற்று அனைவரையும் தன்னுடைய சேட்டைகளால் கவர்ந்தார்.

குக் வித் கோமாளி சீசன் 2
நடிகர் அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த பல விஷயங்கள் தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்ய உள்ளதாகவும் ரசிகர்கள் நம்பத் தொடங்கினர். அந்த அளவிற்கு அஸ்வினை தொடர்ந்து வம்பிற்கு இழுத்துக் கொண்டிருந்தார் சிவாங்கி.

கோமாளி சிவாங்கி
இதேபோல நடிகர் புகழை அண்ணனாக பாவித்து, இவர்கள் இருவரும் அண்ணன் -தங்கை சென்டிமெண்டை பொழிந்ததும் ரசிகர்களை நெகிழச் செய்தது. கோமாளிகளாக இருந்து ரசிகர்களை இந்த நிகழ்ச்சி மூலம் வெகுவாக கவர்ந்த இவர்கள் தற்போது சினிமாவில் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

சிறப்பான கெட்டப்புகள்
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3யிலும் கலந்துக் கொண்டுள்ளார் சிவாங்கி. தொடர்ந்து பலவிதமான கெட்டப்புகளில் இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் இவர் போடும் கெட்டப்பை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் விருப்பத்துடன் காத்திருக்கின்றனர். இதன் புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வருகிறார் சிவாங்கி.

குவியும் பட வாய்ப்புகள்
இந்த நிகழ்ச்சி கொடுத்துள்ள பப்ளிசிட்டியால் இவருக்கு தற்போது அதிகமான சினிமாப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவரது நடிப்பில் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டான் படம் ரிலீசானது. இதில் இவரது நடிப்பு அனைவரின் பாராட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளது. தொடர்ந்து காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகரின் கமெண்ட்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் சிவாங்கி, பொது நிகழ்ச்சிகள், ஆல்பங்கள் என்றும் தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர், சிவாங்கிக்கு எந்த கஷ்டமும் இல்லை எனும் வகையில் பதிவிட்டுள்ளார்.

சிவாங்கி சிறப்பான பதில்
இதற்கு பதிலளித்துள்ள சிவாங்கி, தங்களுக்கும் வேலை குறித்த டென்ஷன் அதிகமாக இருப்பதாகவும், ரசிகர்களை தொடர்ந்து கவர வேண்டிய கட்டாயம் தங்களுக்கு அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே தொடர்ந்து இந்தத் துறையில் நீடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை எளிதானது இல்லை
எந்த வாழ்க்கையும், யாருடைய வாழ்க்கையும் ஈசி கிடையாது என்று கூறியுள்ள அவர், ஏழை, மிடில் கிளாஸ், பணக்காரர்கள் எல்லாருக்கும் அவரவர் பிரச்சினைகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பதிலை ஆமோதித்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
சின்ன படங்கள்.. நம்மள நம்பித்தான் வருது.. ஓய்வெடுக்காமல் உழைத்த கெளசிக்.. பிக் பாஸ் அபிஷேக் உருக்கம்
-
அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண 15 லட்சம்.. அந்த டைரக்டர் கை வச்சிட்டாரு.. நரிக்கூட்டம் ஜனனி ஷாக் பேட்டி!
-
என்னை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்..பிரபல பாடகர் மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு!