5 மில்லியன் வியூசை கடந்த ஷிவாங்கியின் நோ நோ வீடியோ ஆல்பம்

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.

இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன் பின்னணி பாடல்களையும் பாடி வருகிறார்.

ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டுவரும் இவரது சமீபத்திய பாடல் நோ நோ சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. அடுத்த சீசன் எப்பொழுது துவங்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதன் 3வது சீசன் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோமாளி ஷிவாங்கி

கோமாளி ஷிவாங்கி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிறப்பான கோமாளியாக விளங்கி ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார் ஷிவாங்கி. இவர் முன்னதாக சூப்பர் சிங்கரிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். ஒரே நேரத்தில் பாடல் பாடுவதிலும் கோமாளியாக காமெடி செய்வதிலும் இவர் சிறப்பாக விளங்கினார்.

ரசிகர்களின் வரவேற்பு

ரசிகர்களின் வரவேற்பு

இந்த நிகழ்ச்சியின்மூலம் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்ததுடன், மிகவும் பிரபலமானவராகவும் மாறியுள்ளார். இதன்மூலம் படங்களில் பின்னணி பாடும் வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது. முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இவர் பாடியுள்ள பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.

டான் படத்தில் நடிப்பு

டான் படத்தில் நடிப்பு

மேலும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டர் என படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி, காசேதான் கடவுளடா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனியாக ஆல்பம் பாடல்களிலும் பாடி வருகிறார் ஷிவாங்கி.

நோ நோ வீடியோ பாடல்

நோ நோ வீடியோ பாடல்

இவரது சமீபத்திய பாடல் நோ நோ. ஒரு தீமுடன் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டில் திட்டுக்களை வாங்கும் ஒரு இளம்பெண்ணின் கனவு நோக்கிய பயணமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 5 மில்லியனை இந்தப் பாடல் கடந்துள்ளது.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இந்த பாடலை தனியாக தூக்கி சுமந்துள்ளார் ஷிவாங்கி. பாடலில் ஆட்டம் போடுகிறார். பாட்டும் பாடுகிறார். பர்பார்மென்சும் செய்கிறார். இந்த வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்ட 18 மணிநேரங்களில் 2 மில்லியன் வியூஸ்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X