twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மில்லியன் வியூசை தாண்டிய ஒன் மினிட் மியூசிக் தீவானா பாடல்.. ஷிவாங்கி ஹேப்பி அண்ணாச்சி!

    |

    சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் பாடும் வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறார்.

    மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் இவர் தொடர்ந்து பெற்று வருகிறார்.

    விஜய்- வாரிசு பட பிரச்சினையில் அனைவரும் மவுனம் ஏன்? விளைவு மோசமாக இருக்கும்..இயக்குநர் பேரரசு ஆவேசம்விஜய்- வாரிசு பட பிரச்சினையில் அனைவரும் மவுனம் ஏன்? விளைவு மோசமாக இருக்கும்..இயக்குநர் பேரரசு ஆவேசம்

     நடிகை ஷிவாங்கி

    நடிகை ஷிவாங்கி

    விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இவர் விஜய் டிவியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றி பெற முடியாமல் போனாலும் தொடர்ந்து பல படங்களில் பாடல் பாடும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

    பின்னணி பாடகி ஷிவாங்கி

    பின்னணி பாடகி ஷிவாங்கி

    மேலும் பல மியூசிக் ஆல்பங்களிலும் பாடுவதோடு, நடித்தும் வருகிறார். இவரது பல ஆல்பங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே இன்ஸ்டாகிராமில் ஒன் மினிட் மியூசிக் என்ற புதிய இசை வீடியோ முயற்சியில் தனது வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷிவாங்கி வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஷிவாங்கியின் தீவானா பாடல்

    ஷிவாங்கியின் தீவானா பாடல்

    தீவானா என்ற இந்தப் பாடல் தற்போது ஒரு மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்டான ஒன் மினிட் மியூசிக்கில் இந்தியா முழுவதிலும் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷிவாங்கி வெளியிட்ட இந்த வீடியோ பாடல் தீவானா தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    தீவானா பாடலுக்கு சிறப்பான வரவேற்பு

    தீவானா பாடலுக்கு சிறப்பான வரவேற்பு

    இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் இந்த புதிய முயற்சியில் இன்ஸ்டாகிராம் தமிழுக்காக சில்வர் ட்ரீ இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் இயக்குநர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஷிவாங்கியின் தீவானா பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு அனி வீ இசையமைத்துள்ளார். தொடர்ந்து இந்த வீடியோ பாடல் ரசிகர்களின் லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

    படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

    படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

    முன்னதாக ஒன் மினிட் மியூசிக்கின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரஸ்யங்களையும் பகிர்ந்த ஷிவாங்கி, அந்த வீடியோ வெளியீடு குறித்தும் தகவல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒன் மினிட் மியூசிக் ரசிகர்களை கவர தவறவில்லை. தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால் இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பாலோயர்களை ஷிவாங்கி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sivaangi's Deewana song crossed more than one million views in Instagram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X