Don't Miss!
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காதல் நயாகரா.. மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட ஷிவாங்கி!
டொரண்டோ : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ஷிவாங்கி.
இந்த நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான பாடல்களை பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. படங்களிலும் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படம் சிறப்பான விமர்சனங்களை ஷிவாங்கிக்கு பெற்றுத் தந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6ல் விஜய் டிவி பிரபலங்கள்?.. கசிந்தது போட்டியாளர்கள் பற்றிய தகவல்!

விஜய் டிவி நிகழ்ச்சியில் ஷிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய அழகான மயக்கும் குரலால் அனைவரையும் கவர்ந்தவர் ஷிவாங்கி கிருஷ்ணகுமார். இந்த நிகழ்ச்சி இவருக்கு டைட்டிலை பெற்றுத் தந்ததோ இல்லையோ, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி
தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2வில் பங்கேற்று தன்னுடைய கோமாளித்தனங்களால் அனைவரையும் கவர்ந்தார். குறிப்பாக நடிகர் அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த குறும்புகள் வேற லெவல் ரகம். இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதோ என்று ரசிகர்கள் நினைக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டனர்.

ஹிட் பாடல்களை பாடும் ஷிவாங்கி
ஆனால் அதுபோன்ற சம்பவம் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. குறிப்பாக இருவரும் தங்களது கேரியரில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகின்றனர். ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் படங்களில் அதிகமான பாடல்களை பாடி வருகிறார். பல ஹிட் நம்பர்களையும் கொடுத்து வருகிறார்.

குவியும் பட வாய்ப்புகள்
தனிப்பட்ட முறையில் ஆல்பம் பாடல்களையும் பாடி அதில் நடித்தும் வருகிறார். இதன்மூலம் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஷிவாங்கி நடித்திருந்த டான் படம் சமீபத்தில் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3யில் அசத்தல்
தொடர்ந்து காசே தான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொடர்ந்து குக் வித் கோமாளியின் 3வது சீசனிலும் பங்கேற்றிருந்தார். இந்த சீசனிலும் சிறப்பான பல கெட்டப்புகளை போட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். சமீபத்தில் இந்த சீசன் நிறைவு பெற்றுள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சியில் உற்சாகம்
இதனிடையே இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்றுவரும் ஷிவாங்கி தற்போது கனடாவில் நடைபெற்றுவரும் ராகா ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டொரெண்டோ சென்றுள்ளார். அங்கு இசை நிகழ்ச்சிக்கு இடையில் கிடைத்த கேப்பில் நயாகராவையும் கண்டு களித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர் காதல் நயாகரா என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.