ரஜினி முதல்வர்.. நான் துணை முதல்வர்.. சரியா.. பவர் ஸ்டாரின் பொளேர் பேச்சு!

சென்னை : விரைவில் ரஜினி கட்சி தொடங்க வேண்டும். என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று சிவகாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக பேசினார் பவர்ஸ்டார்.

நடிகர் பவர்ஸ்டார் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். இவர் தற்போது சிவகாமி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக பேசியிருக்கிறார். இந்த விழாவில் படக்குழுவுடன் சேர்ந்து பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

 Sivagami audio launch function power star srinivasan speech

நடிகர் பவர்ஸ்டார் ஶ்ரீனிவாசன் லத்திக்கா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் நானூறு நாள் ஓடியது என்று அந்த சமயத்தில் பயங்கரமாக விளம்பரம் செய்தார்.

இந்த விழாவில் பவர்ஸ்டார் பேசிய போது நான் நடிக்க போகும் முன் ராதாரவியிடம் தான் சொல்லிவிட்டு சென்றேன். அதற்கு அவர் ஏன்டா இப்படி பண்ற வேற உருப்படியாக எதாச்சும் வேலை செய்ய கூடாதா என்று கேட்டார். நான் அவர் பேச்சை கேட்காமல் லத்திகா எடுத்தேன் அந்த படம் நானூறு நாள் ஓடிச்சு என்றார் இதற்கு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், அதுக்கப்புறம் ஒரு படத்துல வில்லனா நடிச்சேன் அப்பவும் ராதாரவி அண்ணன் அறிவுரை வழங்கினார். அப்போது தான் படத்தில் நடிப்பதை நிறுத்தினேன் என்றார் பவர்ஸ்டார் .

 Sivagami audio launch function power star srinivasan speech

மேலும் பேசிய பவர்ஸ்டார் ஶ்ரீனிவாசன் வாழ்க்கை ஒரு வாட்டி தானு - சகஜமா ஒரு 40 கோடிய செலவு பண்ணேன் என்றார். இது விழாவில் கலந்து கொண்டவர்களை சட்டென்று சிரிக்க வைத்து விட்டது. சிவகாமி படத்தை பற்றி பேசிய பவர்ஸ்டார் இந்த படத்தின் இயக்குனர் மதுரையில் இருந்து வந்தவர். மதுரையில் இருந்து வந்து பலரும் சாதித்து இருக்கிறார்கள்.அதே போல இவரும் சாதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார் .

கூடிய விரைவில் ரஜினி அவர்கள் கட்சி தொடங்க வேண்டும் என்று கூறிய பவர்ஸ்டார். அப்படி ஆரம்பித்தால் என்னை துணை முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று நகைச்சுவையாக கூறினார். அப்படியில்லை என்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன் அவர் வந்து இணைந்து கொள்ளட்டும் என்று கூறினார்.

சினிமா என்பது கடல் இதில் நீச்சல் அடித்து பிழைத்தவர்கள் குறைவு ஆனால் மூழ்கி போனவர்கள் ஏராளம். நல்ல உழைப்பை கொடுத்து நடியுங்கள் பிரபலமாகுங்கள் என்று இன்றைய சினிமாவில் நுழைய நினைப்பவர்களுக்கு அறிவுரை கூறி சென்றார் பவர்ஸ்டார் ஶ்ரீனிவாசன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X