»   »  காங்கிரஸின் சிவாஜி விருது!

காங்கிரஸின் சிவாஜி விருது!

Subscribe to Oneindia Tamil

தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் விருது நிறுவப்பட்டுள்ளது. திரையலகில் சிறந்து விளங்கும்நடிகர்களுக்கு ஆண்டுதோறும் சிவாஜி விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசின் திருவுருவப் படம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி படத்தைத் திறந்து வைத்தார்.

மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி பேசுகையில்,காமராஜர் ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும் என சிவாஜி கனவு கண்டார். அந்தக் கனவு நனவாக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

இனிமேல் ஆண்டுதோறும் சிறந்து நடிகர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவாஜி விருது வழங்கப்படும் என்றார்.

இளங்கோவன் பேசுகையில், இன்றில்லாவிட்டாலும் கண்டிப்பாக ஒரு நாள் காமராஜர் ஆட்சி தமிழகத்தில் வரும். அது உறுதி. அதில் எந்த மாற்றமும்இல்லை.

தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக சிவாஜி கணேசன் கடுமையாக பாடுபட்டார். பல தியாகங்களை அவர் செய்துள்ளார்.அவர் கண்ட கனவுகாமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பது. அந்தக் கனவை நனவாக்க அனைவரும் கடுமையாக உழைப்போம் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil