வந்தியத்தேவன் கேரக்டருக்கு ரஜினியை டிக் செய்த சிவாஜி, ஜெயலலிதா: அட இது வேறலெவல் ப்ளாஷ்பேக்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது ரஜினி பற்றி சிவாஜியும் ஜெயலலிதாவும் பேசிய சுவாரஸ்யமான நினைவலைகள் குறித்து தகவல்கள் கிடைத்தன.

கலக்கவரும் பொன்னியின் செல்வன்

கலக்கவரும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' பான் இந்தியா படமாக வரும் 30ம் தேதி வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொன்னியின் செல்வன் ப்ளாஷ்பேக்

பொன்னியின் செல்வன் ப்ளாஷ்பேக்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் முன்னிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கமல்ஹாசனின் பின்னணிக் குரலில் வெளியான இந்த ட்ரெய்லர், பிரம்மாண்டமாகவும் மிரட்டலாகவும் உருவாகியுள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படமும், செம்ம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் மேடையில், பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின.

ரஜினியை தேர்வுசெய்த ஜெயலலிதா

ரஜினியை தேர்வுசெய்த ஜெயலலிதா

'பொன்னியின் செல்வன்' நாவல் குறித்து பேசிய ரஜினிகாந்த், "நான் முதலில் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆர்வம் காட்டவில்லை. ரொம்ப பெரிய நாவலாக இருந்ததால், படிக்காமல் இருந்து வந்தேன். அப்போது ஒரு இதழில் பொன்னியின் செல்வன் நாவல் குறித்து பேட்டிக் கொடுத்திருந்த ஜெயலலிதா, இதில் வரும் வந்தியத்தேவன் பாத்திரத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருந்தார்." அதன்பிறகு தான் நான் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தேன் என பேசினார்.

சிவாஜியும் ரஜினியைதான் டிக் அடித்தார்

சிவாஜியும் ரஜினியைதான் டிக் அடித்தார்

இந்தத் தகவலை ரஜினி சுவாரஸ்யமாக மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, அருகில் நின்றிருந்த கமல் மைக் பிடித்து இன்னொரு சூப்பர் தகவலை கூறினார். அதாவது "நான் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க உரிமை வாங்கி வைத்திருந்தேன். அப்போது அதுகுறித்து மறைந்த நடிகர் சிவாஜியிடம் டிஸ்கஸ் செய்தேன். உடனே அவர் அந்த வந்தியத்தேவன் கேரக்டருக்கு அவன போடு அவன போடு, ரஜினி தான் இந்த கேரக்டருக்கு சரியா இருக்கும் என, சிவாஜியும் ரஜினியைத் தான் தேர்வு செய்தார். இதுக்கு நடிகர் பிரபு தான் சாட்சி, அவரும் அப்போது அங்கிருந்தார்" எனக் கூறினார். சிவாஜி, ஜெயலலிதா இருவருமே வந்தியத்தேவன் கேரக்டருக்கு ரஜினியை தேர்வு செய்திருந்தது, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X