ப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்!
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசனையும் அவரது மகளையும் சிவாஜி குடும்பத்தினர் வரவேற்று உபசரித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதனை இயக்குநர் ஷங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலத்தில் இருந்தே சிவாஜி குடும்பத்திற்கு நெருக்கமானவர்.

சிவாஜி வீட்டிற்கு விஜயம்
தற்போது அரசியல் சினிமா என பிஸியாக இருந்தாலும் சிலருக்கு நேரம் ஒதுக்குவதற்கு தவறுவதில்லை. அந்த வகையில் நேற்று சிவாஜியின் வீடான அன்னை இல்லத்திற்கு தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் சென்றார் கமல்ஹாசன். அங்கு அவருக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

பாராட்டு மடல்
விருந்தை முடித்த கமல், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்தார். விருந்துக்கு வந்த கமலுக்கு பிரபு பாராட்டு மடல் ஒன்றையும் அளித்தார்.
கமல் டிவிட்
சிவாஜி குடும்பத்தினருடனான சந்திப்பு குறித்த போட்டோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட கமல், அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. என்று பதிவிட்டார். கமலின் இந்த டிவிட் நேற்று வைரலானது.

ஆரத்தி எடுத்து வரவேற்பு
இந்நிலையில் நடிகர் கமலை சிவாஜி குடும்பம் வாசலில் இருந்து வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கமலை சிவாஜி குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வாசலில் இருந்து ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். அப்போது சிவாஜி குடும்பத்தை சேர்ந்த அத்தனை பேரும் வாசலில் வந்து நின்று வரவேற்று அவரை வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர்.

வெள்ளித்தட்டில் கவிதை
பின்னர் வீட்டுக்குள் உள்ள சிவாஜியின் படத்திற்கு கமல்ஹாசனும் ஸ்ருதி ஹாசனும் மலர் தூவி மரியாதை செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து வெள்ளித்தட்டில் தனது கவிதையை பதித்து நினைவுப் பரிசாக வழங்குகிறார் பிரபு. அதனை ரசித்து படித்துகொண்டே பெற்றுகொள்கிறார் கமல். இந்த அழகு வீடியோ சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











