கமல்ஹாசனை வீட்டிற்கு அழைத்து கண்ணீர் விட வைத்த சிவாஜி குடும்பம்! உருகிய உலகநாயகன்!
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசனை சிவாஜி குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து கண்ணீர்விட வைத்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், அரசியல், சினிமா என படுபிஸியாக உள்ளார்.
அண்மையில் விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல். அவ்வப்போது அரசியல் தொடர்பாகவும் பேசி வருகிறார் கமல்ஹாசன்.

அன்னை இல்லத்தில் விருந்து
இந்நிலையில் கமல்ஹாசன் பதிவிட்ட டிவிட் ஒன்று இன்று வைரலாகி வருகிறது. அதாவது, சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் கமலுக்கும் அவரது மகள் ஸ்ருதிஹாசனுக்கும் சிவாஜி குடும்பத்தார் விருந்து கொடுத்துள்ளனர்.

தலைமகன் நீ கலைஞானி!
அதோடு நடிகர் பிரபு கமலை பாராட்டி கவிதை மடல் ஒன்றையும் பரிசாக வழங்கியிருக்கின்றனர் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும். அந்த பாராட்டு மடலில் தெரிவித்திருப்பதாவது,
அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம்
திரு.சிவாஜி.
அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி
அவரின் தலைமகன் நீ கலைஞானி!
நடிகர் திலக நாயகனே பாராட்டிய
உலகநாயகனே!
நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!
நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு
வாழ்ந்திடுக நூறாண்டு!
அன்புடன் அன்னை இல்லம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குரூப் போட்டோ
சிவாஜி கணேசன் வீட்டில் கமலுக்கு விருந்து கொடுக்கப்பட்ட நிகழ்வில் நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினரும், அவரது அண்ணன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அவர்கள் கமலுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
கண் கலங்க வைத்தது
இதுகுறித்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது, அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. என தெரிவித்திருக்கிறார் கமல்.


Click it and Unblock the Notifications











