பாபா ரீ-ரிலீஸுக்கு முன் சிவாஜி தி பாஸ்... ரஜினி ரசிகர்களுக்கு திடீரென ட்ரீட் கொடுத்த ஏவிஎம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தில் இருந்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரஜினியின் பாபா திரைப்படத்தை வரும் 11ம் தேதி படக்குழு ரீ-ரிலீஸ் செய்யவுள்ளது.
இந்நிலையில், பாபா ரீ-ரிலீஸுக்குப் போட்டியாக சிவாஜி படத்தின் மறுவெளியீடு குறித்து ஏவிஎம் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

பாபா ரீ-ரிலீஸ்

பாபா ரீ-ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 12ம் தேதி ரஜினி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு ஜெயிலர் படத்தில் இருந்து முக்கியமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்யவும் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

பாபாவுக்கு முன் சிவாஜி

பாபாவுக்கு முன் சிவாஜி

2002ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த பாபா திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆன்மீகம் கலந்த பேண்டசி திரைப்படமான பாபா, தற்போது டால்பி சவுண்ட் சிஸ்டம் உட்பட புதிய டெக்னாலஜியில் ரீ-ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. 2கே கிட்ஸ்களை குறிவைத்து ரஜினிகாந்த் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பாபா திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கான ட்ரெய்லரும் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இதனிடையே தற்போது பாபா படத்திற்கு முன்னர் ரஜினியின் சிவாஜி இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏவிஎம் நிறுவனம் அறிவிப்பு

ஏவிஎம் நிறுவனம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக ஏவிஎம் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சிவாஜி தி பாஸ்' திரைப்படம், தமிழ், இந்தி மொழிகளில் இன்று வெளியாகிறதாம். PVR சினிமாஸ், இந்தியா சினிபோலிஸ் திரைகளில் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிவாஜி திரைப்படம் திரையிடப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஏவிஎம் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

2007ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷ்ரேயா, விவேக், சுமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான முதல் திரைப்படமும் இதுதான். ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஆன்மீகம் கலந்த பேண்டசி திரைப்படமாக பாபா ரீ-ரிலீஸ் செய்யப்படும் அதேநேரம், ரஜினியின் கலக்கலான ஸ்டைலில் உருவான சிவாஜியும் இன்று ரீ-ரிலீஸ் ஆவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பாபா, சிவாஜி இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X