twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி கணேசன் சாதாரண உயரம்..சோழ மன்னராக மேக்கப் போட்டால்..என்ன ஒரு கம்பீரம்..வியந்த நடிகை லட்சுமி

    |

    சிவாஜி கணேசன் கதாப்பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுவார் என்பதை பலர் சொல்ல கேட்டாலும் உடன் நடித்த லட்சுமி அவரைப்பற்றி சொன்னது சிறப்பான ஒன்று.

    சிவாஜி கணேசன் பாகப்பிரிவினையில் மாற்றுத்திறனாளியாக அப்பாவியாக நடித்த அதே ஆண்டில் தான் வீரபாண்டியனாக நடித்து அசத்தியிருப்பார்.

    கர்ணன் படம் நடித்த அதே ஆண்டில் தான் பெரும் செல்வந்தராக ஆங்கில பாணியில் புதிய பறவையில் வேடமிட்டு நடித்திருப்பார். அவர்தான் சிவாஜி கணேசன்.

    விஷால் வீட்டில் கல்வீச்சு..பிடிபட்ட 4 பேர் சொன்ன பேய்க்கதை..வயிறு வலிக்க சிரித்த போலீஸார் விஷால் வீட்டில் கல்வீச்சு..பிடிபட்ட 4 பேர் சொன்ன பேய்க்கதை..வயிறு வலிக்க சிரித்த போலீஸார்

     ஜாம்பவான்கள் காலத்தில் எதிர்நீச்சல் போட்டு வென்ற சிவாஜி

    ஜாம்பவான்கள் காலத்தில் எதிர்நீச்சல் போட்டு வென்ற சிவாஜி

    தமிழ் திரையுலகம் பல நடிகர்களை கண்டுள்ளது. நடிவேள் என்று பாராட்டப்பட்ட எம்.,ஆர்.ராதா, கலைவாணர் என்று அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா என பலர் இருந்தனர். பல கதாநாயக நடிகர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடிப்பில் வித்தகர்களாக இருந்தனர். ஆனால் அனைத்தையும் உள்ளடக்கிய ஒருவராக சிவாஜி கணேசன் இருந்தார். சிவாஜி கணேசன் நடிக்க வந்த காலக்கட்டம் சிவாஜி கணேசன் போலவே நாடகத்தில் நடித்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் இருந்தனர். போட்டி மிகுந்த காலக்கட்டம், அதில் முந்தி வருவது என்றால் அதற்கு கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டும் அதை செலுத்தினார் சிவாஜி கணேசன்.

     உடன் நடிப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்திய நடிகர் திலகம்

    உடன் நடிப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்திய நடிகர் திலகம்

    அதில் வெற்றிக்கொடியும் நாட்டினார். இதை எழுத்துக்காக பதிவு செய்ய முடியாது. இதை தமிழகமும் கண்டது. சுதந்திரப்போராட்ட வீரரா? வீர மன்னர்களா? கப்பலோட்டிய தமிழனா? முன்னணி வழக்கறிஞரா, போலீஸ் அதிகாரியா, சாதாரண குமாஸ்தாவா அனைத்துமாக வாழ்ந்து காட்டியவர் சிவாஜி. சிவாஜி கணேசன் பெரும் மன்னர்கள் பாத்திரத்தில் நடித்துள்ளார், கடவுளர்களாக நடித்துள்ளார். அந்த வேடங்களில் அவர் நடிக்கும்போது பாத்திரமாக மாறி உடல் மொழி, கம்பீரமான குரலில் வசனம் என உடன் நடிப்பவர்களே பிரமிக்கும் வண்ணம் இருக்கும். வசங்கள் அவர் வாயிலிருந்து விழும்போது தமிழகம் போற்றும் வசனங்களாக மாறியது. வரி, வட்டி திறை, கிஸ்தி என வீரபாண்டிய கட்டபொம்மனாக ஒருபுறம், டேய் பட்டினத்தான் தம்பிய கெடுக்காதடா என அப்பாவியாக பாகப்பிரிவினை படத்தில் வித்தியாசம் காட்டுவார்.

     அப்பப்பா ராஜராஜ சோழனில் அவரது கம்பீரம் - லட்சுமியின் அனுபவம்

    அப்பப்பா ராஜராஜ சோழனில் அவரது கம்பீரம் - லட்சுமியின் அனுபவம்

    சிவாஜி கணேசனுடன் ராஜராஜ சோழனில் நடித்த லட்சுமி தனது அனுபவத்தை ஒருமுறை கூறியிருந்தார். சிவாஜி கணேசன் சாதாரண உயரம் தான் ஆனால் அவர் செட்டில் இருக்கும்போது சாதாரணமாக தெரிவார், ஆனால் மன்னர் மேக்கப்பை போட்டுவிட்டால் பிரம்மாண்டமாக தெரிவார். எங்கிருந்துதான் அப்படி ஒரு தோற்றம் வருமோ தெரியாது, அப்படி ஒரு கம்பீர தோற்றம் இருக்கும், இதை நான் பல நாள் கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அவர் சாதாரண ரசிகை கிடையாது. அதே கலைத்துறையில் இருந்த சக நடிகை. இதுபோல் பல அனுபவங்கள் பல நடிகர் நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

     சிவாஜி கணேசன் செய்தது ஓவர் ஆக்டிங்கா

    சிவாஜி கணேசன் செய்தது ஓவர் ஆக்டிங்கா

    சிவாஜிகணேசன் ஆகச்சிறந்த நடிகர் அவர் ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனமும், பின் நாளில் நகைச்சுவைக்காக அவரது சில நடிப்புகளும் எடுத்து கையாண்டிருப்பார்கள், ஆனால் அதுபோன்ற ஒரு நடிப்பை அந்த காலத்தில் திரையில் முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர் அதை அனைவரும் ரசித்தனர். மற்றொரு முக்கியமான விஷயம் அவரும் அவர் காலத்திய நடிகர்களும் மேடை நாடக கலைஞர்கள். 100 மீட்டருக்கு அப்பால் உள்ள ரசிகனும் பார்ப்பதுபோன்ற உடல்மொழி, முகபாவனை காட்டி நடிக்க வேண்டும். அந்த பயிற்சி சில இடங்களில் வெளிப்படுவது இயல்பான ஒன்று. அதே நேரம் யதார்த்த நடிப்பை சிவாஜியை மிஞ்சி யாரும் கொடுத்ததாக தெரியவில்லை.

     சிறந்த நடிகர் சிவாஜிக்கு வழங்காதது 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி

    சிறந்த நடிகர் சிவாஜிக்கு வழங்காதது 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி


    அதீத நடிப்பு என்று சொல்லும் பலரும் ஒவ்வொரு நடிகனிடமும் ஏதாவது ஒரு இடத்தில் சிவாஜியின் சாயல் இல்லாமல் நடிக்க முடியாது என்பதை காணலாம். உதாரணத்திற்கு ஒரு காட்சி வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் புற்றுநோய் பாதித்த ஜாகீர் இறந்தப் பின்னர் கமல் அழுவார் அந்தக்காட்சியை மீண்டும் ஒரு முறை பார்த்தால் அதில் சிவாஜியின் சாயல் தெரியும். உலக நாயகனை விடவா ஒரு நடிகர் உண்டு. அவரே சிவாஜியின் ஸ்டைல் தான் நான், ரஜினி அனைவரும் ஃபாலோ பண்ணினோம் என்று சொல்லியிருப்பார். கௌரவம் படத்தில் அப்பா சிவாஜி படிகளில் ஒரு பக்கமாக திரும்பி இறங்கும் ஸ்டைலையும் படிகட்டிக் உட்கார்ந்தப்படி மது அருந்துவார், அதையும் ரஜினி சில படங்களில் கையாண்டிருப்பார். அனைவருக்கமான குருவாக இருந்த சிவாஜிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படாதது 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி எனலாம்.

    Read more about: chola king sivaji ganesan
    English summary
    Although many asked that Sivaji Ganesan would adapt to the nature of the character, co-star Lakshmi had something to say about him. In the same year Shivaji Ganesan played an innocent role as a trans-disabled person in Paga Pirivinai, he would be amazing as Veerapandiyan. In the same year as Karnan, he acted as a rich man in Puthiyaparavai an English style. He is The legend, Shivaji Ganesan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X