சிவாஜி இருந்திருந்தா அந்த ரோல் அவருக்குத்தான்.. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!
சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் சார் இருந்திருந்தால் அவர் தான் நடித்திருக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அமிதாப் பச்சனின் டான் படத்தைத் தான் தமிழில் பில்லா என ரீமேக் செய்து ரஜினிகாந்த் நடித்திருந்தர். தீ உள்ளிட்ட பல படங்களும் அமிதாப் பச்சன் படங்கள் தான்.

ஹம், அந்தாகனூன், கெராஃப்தார் உள்ளிட்ட சில படங்களிலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். முதல் முறையாக தமிழ் படத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ள நிலையில், அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சிவாஜி நடிச்சிருக்கணும்: அமிதாப் பச்சனை பல தமிழ் படங்களில் நடிக்க வைக்க ரஜினிகாந்த் முயற்சி செய்த நிலையில், கடைசியாக வேட்டையன் படத்தில் ஒரு வழியாக அது சாத்தியமானது. என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ரஜினிகாந்துக்கும் அதை வெறுக்கும் உயர் அதிகாரியான அமிதாப் பச்சனுக்கும் இடையே நடக்கின்ற மோதலாகத்தான் இந்த படம் இருக்கும் என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிவாஜி சார் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப் பச்சன் சார் நடிச்ச கதாபாத்திரத்தில் அவர் தான் நடித்திருப்பார். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என சூப்பர் ஸ்டார் பேசியுள்ளார்.

சிவாஜியுடன் இணைந்து: விடுதலை, படிக்காதவன், படையப்பா என பல படங்களில் சிவாஜியுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். வேட்டையன் படத்திலும் அவர் இருந்திருந்தால் அவருக்குத்தான் அந்த கதாபாத்திரம் பொருந்தும் என பேசியுள்ள நிலையில், கல்கி 2898 ஏடி படத்தை போலவே வேட்டையன் படத்திலும் அமிதாப் பச்சனுக்கு வெயிட்டான ரோல் என்பது தெரிய வருகிறது.
1000 சதவீதம் அனிருத்: வேட்டையன் படத்தை ஆரம்பிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது இயக்குநர் ஞானவேல் என்னிடம் 100 சதவீதம் எனக்கு அனிருத் வேண்டும் என்றார். உங்களுக்கு 100 சதவீதம் என்றால், எனக்கு 1000 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என வேட்டையன் இசை வெளியீட்டு விழாவின் நாயகனாக அனிருத்தையும் உச்சிக் குளிர வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.


Click it and Unblock the Notifications











