twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலை என்னும் ஐடி கம்பெனியின் சி.இ.ஒ நடிகர் திலகம் சிவாஜி - கவிஞர் வைரபாரதி

    |

    Recommended Video

    ACTING LEGEND SIVAJI |ACTOR SIVAJI GANESAN BIRTHDAY SPECIAL| KALTHOON RAMACHANDRAN | FILMIBEAT TAMIL

    சென்னை: இந்திய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டியது, சிவாஜி போல் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பதே. இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது சிவாஜி போல் அவமானங்களை சகித்துக்கொள்ள பழகுவது, பொறுமை அவரைப் போல எதிலும் தன் திறமையை நம்புவது Self Confidence. மனசு விட்டு பேசினால் உளவியல் தெளிவாகும் சிவாஜி படங்கள் பார்த்தால் ரிலேஷன் ஷிப் கெட்டியாகும் என்று கவிஞர் வைரபாரதி குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. இந்தியாவில் இவருடைய பெயரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. இந்திய சினிமாவில் இந்த வார்த்தையை உச்சரிக்காத நடிகர்களும் இருக்க முடியாது. இந்திய நடிகர்கள் யாரும் இவருடைய நடிப்பு பாணியை கொஞ்சமேனும் பின்பற்றாமல் இருக்க முடியாது. என்னுடைய பாணி தனி என்று எந்த நடிகராவது சொன்னால் அவர்கள் நிச்சயம் பொய் சொல்வதாகத் தான் அர்த்தம்.

    Sivaji Ganesan’s 92nd Birth day celebration

    நடிப்புக்கு முழு இலக்கணம் நடிகர் திலகம் தான். இவருடைய நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று இன்றைய இளைஞர்கள் கிண்டலடிப்பதுண்டு. மறைந்த நடிகர் சோ, அறிமுகமான பார் மகளே பார் படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார். அப்போது சிவாஜியின் ஓவர் நடிப்பு பற்றி வெளியில் அனைவரும் பேசியதை சுட்டிக்காட்டினார் சோ.

    அப்போது பதிலளித்த நடிகர் திலகம், பார் மகளே பார் படத்தில் ஏற்கனவே தான் நடித்த ஒரு காட்சியை சிவாஜி சாதாரணமாக வெகு இயல்பாக நடைமுறை வாழ்க்கையில் அழுவது போலவே நடித்துக்காட்டினார். அதைப் பார்த்த சோ, சார் வேணாம் சார், நீங்க எப்பவும் போலவே நடிங்க சார் அது தான் ரசிக்கும்படி உள்ளது என்று தெரிவித்தார் சோ. (இதை குமுதம் வார இதழில் வெளியான தன்னுடைய ஒசாமா அசா என்ற தொடரில் குறிப்பிட்டிருந்தார்)

    இவ்வளவு பெருமை வாய்ந்த நடிகர் திலகத்தின் பிறந்த நாள் அக்டோபர் 1ஆம் தேதியான நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவருடைய நினைவலைகளை தன்னுடைய கவிதையின் வழியாக பதிவிட்டிருக்கிறார் கவிஞர் வைரபாததி.

    சிவாஜி ஒரு Stress Buster

    சிவாஜி நடிப்பில் இளமையோட்டம் இருந்தது உடல் அசைவில் ஒரு இளமை நளினம் இருந்தது
    எத்தனை விதமான நடையோ அத்தனை விதமான நடையிலும் இளமைத் துள்ளல் தெறித்து ஓடியது

    நடிப்பதற்கும் சிவாஜி தான்
    நடப்பதற்கும் சிவாஜி தான்

    சிவாஜியின் நேரம் தவறாமை இளைஞர்கள் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
    தனது சக போட்டியாளரைக் கடந்து அடுத்த தலைமுறை பிரபு கார்த்திக்கோடும் நடித்தவர் சிவாஜி

    தன் மகன் பிரபுவோடு நடிக்கும் போது அதே வேகம் அதே இளமை
    இளைய திலகம் பிரபு சிரித்தால் அழகாக கன்னத்தில் குழி விழும்
    நடிகர் திலகம் சிவாஜி சிரித்தால் அதில் இன்றைய இளைஞர்களே விழுந்து விடுவார்கள்

    அவசரத்திற்கு ஓட்டல் சாப்பாடு
    ஆனால் அறுசுவைக்கு அம்மா கையால் சாப்பாடு
    அப்படி அம்மா கையால் சாப்பிடுவது போலவே சிவாஜி நடிப்பும் அவரது படங்களும்

    இது ஐ.டி யுகம் ஐடன்டி கார்டே தாலிக்கான டெமோ
    இந்த பரபரப்பு யுகத்தில் அம்மா அப்பாவை மட்டும் அல்ல நம்ம யூத் பசங்களுக்கு தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளக்கூட நேரமே இல்லை

    விதவிதமான Dress அப்போது Fashion.
    விதவிமான Stress இப்போது Fashion.

    இந்த ஸ்ட்ரெஸ் ஆபத்து என்ற படியால் அதற்கான ஒன்லி சைக்காலஜிஸ்ட் டாக்டர் சிவாஜி நடிப்பே

    அவர் படங்களைப் பார்ப்பது என்பது ஜாலியாக பாட்டி தாத்தா பாசம் பெறுவது போல
    உறவுகளின் உன்னதம் அறிய

    இளைஞர்களை பேலன்ஸ் ஆக வைத்திருக்க சிவாஜியை இப்போதும் கொண்டாட வேண்டும்
    போர்க்களத்தில் வாள் வைத்திருப்பது போல் வேலை. கேடயம் வைத்திருப்பது போல் கலை.
    அந்தக் கலை எனும் ஐடி கம்பெனியின் சி.இ.ஓ சிவாஜி

    பிரபு அவரின் அடுத்த தலைமுறை
    அதற்கும் அடுத்த தலைமுறை இளைய தளபதி விஜய் உடனும் நடித்திருக்கிறார்

    சின்னச் சின்ன காதல் பாட்டிற்கு ஒரு ஆட்டம் போடுவார்
    திடீரென காதலி பிரிந்த நினைவு எழ டக்குனு சோகமாவார்

    அவர் அணிந்திருக்கும் ஜீன்ஸ் டீ சர்ட்
    சிங்கம் காட்டிலிருந்தாலும் சர்க்கஸ்சில் இருந்தாலும் சிங்கமே

    நம்ம புரட்சி தளபதி விஷால் அவர்களின் அண்ணன் அஜய் படமான பூப்பறிக்க வருகிறோம் அதில் நடித்திருப்பார்

    இளைய தலைமுறையின் இளைய தலைமுறையோடு நடிக்கும் போது அவரும் இளைஞராக உடல் மொழியை மாற்றி நடித்திருக்கும் சுறுசுறுப்பு டெடிகேஷன் டைமிங் சென்ஸ்

    நம்ம பசங்க நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அவரைப் பார்த்து
    தேவர் மகனில் அவர் கொடுத்த உயிர்
    படையப்பாவுக்காக அவர் கொடுத்த உயிர்
    அந்த வீட்டைப் பிரிவதற்கு ஒரு ஓட்டம் ஓடி தூணைப் பிடித்து ஒரு பார்வை
    ஹாலிவுட் நடிகன் கூட....
    நிற்க.. அவர்களை ஏன் இதில் இழுக்க வேண்டும்

    எமோஷனுக்கான பிரமோஷன் only after சிவாஜி arrival...

    இந்திய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டியது
    சிவாஜி போல் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பதே

    யூத் புறாக்கள் கற்றுக் கொள்ள வேண்டியது
    சிவாஜி போல் அவமானங்கள் சகிக்கப் பழகுவது
    பொறுமை அவரைப் போல எதிலும்
    தன் திறமையை நம்புவது
    Self Confidence.

    தெய்வ மகனில் ஒரு மகன் வேடம்
    இப்போது யூத் எப்படி இருக்கிறார்களோ அதை அப்போதே பிரேம் போட்டு மாட்டி வைக்க பிரேமுக்கு பிரேம் அசத்தி இருப்பார்

    மனசு விட்டு பேசினால் உளவியல் தெளிவாகும்
    சிவாஜி படங்கள் பார்த்தால் ரிலேஷன் ஷிப் கெட்டியாகும்
    ரசனை இதயம் வலிகளை சுலபமாய் கடக்கும்
    சிவாஜி ரசிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்

    பேரன் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி வேகமான திரைக்கதை
    அவர் தன் தாத்தா சிவாஜி என உணர்ந்தால் பெரிய பொறுப்புணர்வு கூடும்
    நடித்து அசத்த இன்னும் வாய்ப்புகளும் படங்களும் இருக்கின்றன அவருக்கு
    அவருக்கு தான் அவர் தாத்தா
    நமக்கு அவர் இளமை என்பது ரசனை எனச் சொல்லி தரும் யூத் ஐக்கான்
    ரசனை வைத்தே ரசாயன நோய் அழிக்கும்
    சிவாஜி ஒரு Stress Buster...

    மிகுந்த ரசனையுடன்
    வைரபாரதி

    English summary
    Indian politicians need to learn how to do the work that Sivaji did. Young people need to learn how to tolerate insults like Sivaji. The poet Vairabarathi has stated that he should patiently trust in his own ability to be like him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X