»   »  42 ஆண்டுகளுக்கு முன் சிவாஜி நடித்த சிவகாமியின் செல்வன்... டிஜிட்டலில் ரிலீசாகிறது!

42 ஆண்டுகளுக்கு முன் சிவாஜி நடித்த சிவகாமியின் செல்வன்... டிஜிட்டலில் ரிலீசாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

42 ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சிவகாமியின் செல்வன் படம் மீண்டும் புத்தம் புதிய காப்பியாக வெளியாகிறது.

அந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் மதுரையில் வெளியானது.

Sivaji Ganesan's Sivagamiyin Selvan trailer launched

ஹிந்தியில் பெரும் வெற்றியைக் குவித்த ஆராதனாவின் தமிழ் ரீமேக்தான் சிவகாமியின் செல்வன்.

1974 ஆம் ஆண்டு கண்ணதாசன், வாலி, புலமைபித்தன் ஆகியோர் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியானது.

Sivaji Ganesan's Sivagamiyin Selvan trailer launched

இதில் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ, லதா, எம்என் ராஜம், எஸ்வி ரங்காராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியிடு விழா சமீபத்தில் மதுரையில் உள்ள பிரியா காம்பளக்ஸ் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Sivaji Ganesan's Sivagamiyin Selvan trailer launched

இந்த முயற்சி மறைந்த விமான ஓட்டி, லெப்டினன்ட் பிரவீண் அவர்களுக்காக சமற்பிக்கபட்டது. இவ்விழாவை பிரவீணின் தாயார் மஞ்சுளா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

நீதிபதி பொன்னுசாமி "சிவகாமியின் செல்வன்" டிரைலரை வெளியிட கமலா சினிமாஸ் வள்ளியப்பன் பெற்றுகொண்டார்.

ஏர்போர்ஸ் அசோசியேஷன் சார்பாக சுமார் 200க்கு மேற்பட்டவர்களும், மாயாண்டி பாரதி மேல்நிலை பள்ளியிலிருந்து சுமார் 300 மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். மேலும் சென்னை, திருச்சி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பெருவாரியான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவின் ஏற்பாடுகளை ஸ்ரீ சூர்யா மூவிஸ் குணசேகரன், மதுரை சிவா மூவிஸ் திரு கா. சுந்தர்ராஜன், பிரபு வெங்கடேஷ், ரமேஷ் பாபு, பழினிசாமி, பாண்டி, குமார், கார்த்திகேயன், சோமசுந்தரம் செய்திருந்தனர்.

English summary
Sivaji Ganesan's 1974 release Sigamiyin Selvan's digital version is releasing soon in screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil