சிவாஜி மகனுக்கு திடீரென வந்த கோபம்.. மேடையிலேயே அந்த நபரை போட்டு எப்படி குத்துறாரு பாருங்க!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பங்கேற்று இருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் மேடையில் ஒரு நபரை கோபத்துடன் குத்தும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ உள்ளிட்ட படங்களில் வில்லனாக ராம்குமார் நடித்துள்ளார். பல படங்களை தயாரித்தும் உள்ளார்.
சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா: 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி விழுப்புரத்தில் பிறந்த கணேசன் நாடகங்களில் சத்ரபதி சிவாஜியாக நடித்து மிரட்டிய நிலையில், சிவாஜி கணேசனாகவே சினிமாவில் பிரபலமானார். நடிகர் திலகம் என உலகளவில் சினிமா கலைஞர்கள் மற்றும் மக்களால் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். என்றுமே மறையாத புகழுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
சிவாஜி மகன்கள் பங்கேற்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் மற்றும் இளைய மகன் பிரபு உள்ளிட்ட இருவருமே இன்று சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தான் திடீரென சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ஆவேசப்பட்டுள்ளார்.
ராஜபுத்திரன் புரமோஷன்: அறிமுக இயக்குநர் மகா கந்தன் இயக்கத்தில் இளைய திலகம் பிரபு, 8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி, கோமல் குமார், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தின் புரமோஷன் போஸ்டருடன் இந்த நிகழ்ச்சியில் பிரபு மற்றும் வெற்றியும் பங்கேற்று இருந்தனர்.
ஆத்திரத்தில் அடித்த ராம்குமார்: கூட்டத்தில் மேடையில் பின்னாடி இருந்து ஒருவர் ராம்குமாரை முந்திக் கொண்டு முன்னே வர பார்த்த நிலையில், அதனால் ஆவேசப்பட்ட நடிகரும் தயாரிப்பாளருமான ராம்குமார் அந்த நபரை ஆவேசத்துடன் குத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ராம்குமாரை பின்னாடி இருந்த நபர் அடித்து விட்டதாக நினைத்து அவர் கை முட்டியை மடக்கி அந்தக் குத்து குத்துகிறார் என நெட்டிசன்கள் வீடியோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர். பொதுவெளியில் சிவாஜி மகன் இப்படியா கோபத்தை வெளிப்படுத்துவார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











