டிஜிட்டல் கியூப்பில் மீண்டும் வெளியாகிறது சிவாஜியின் வசந்த மாளிகை!!

By Shankar

சென்னை: சிவாஜி கணேசனின் காதல் காவியம் எனப் புகழப்படும் வசந்த மாளிகை படம் வரும் மார்ச் 1-ம் தேதி டிஜிட்டல் கியூப்பில் வெளியாகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1972-ல் வெளியாகி மெகா ஹிட்டான படம் வசந்த மாளிகை.

கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில், டி ராமாநாயுடு தயாரிப்பில் வெளிவந்த படம் இது.

அத்தனை மொழிகளிலும் வெற்றி

அத்தனை மொழிகளிலும் வெற்றி

இந்தக் கதையை வேறு வேறு நடிகர்களை வைத்து, தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் தயாரித்து பெரு வெற்றியைக் குவித்தனர் அன்றைய நாட்களில்.

ஒஸ்தியான காதல் படம்

ஒஸ்தியான காதல் படம்

தமிழில் அன்றைக்கு ஓட்டத்தில் மட்டுமல்ல, வசூலிலும் சாதனைப் படைத்த படம் இது. அருமையான படமாக்கம், காதுக்கினிய பாடல்கள் - இசை, பிரமிக்க வைக்கும் நடிப்பு என அனைத்து வகையிலும் ஒஸ்தியான காதல் படமாகத் திகழ்ந்தது வசந்த மாளிகை.

13 இடங்களில் 100 நாட்கள்

13 இடங்களில் 100 நாட்கள்

அன்றைக்கு இந்த படம் 13 இடங்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. மதுரை நியூ சினிமா தியேட்டரில் 200 நாட்களும், சென்னை சாந்தி தியேட்டரில் 176 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் வெற்றியைத் தொடர்ந்து...

கர்ணன் வெற்றியைத் தொடர்ந்து...

இந்த படம் இப்போது டிஜிட்டல் கியூப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீசாகிறது. டிஜிட்டலில் கர்ணன் படம் வெளிவந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வசந்த மாளிகை படத்தையும் டிஜிட்டல் கியூப்பில் மாற்றியுள்ளனர். இதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் மார்ச் 1-ம் தேதி திரையிடப்படுகிறது.

டிஜிட்டல் க்யூபில்

டிஜிட்டல் க்யூபில்

வசந்த மாளிகை பிரிண்ட்கள் ‘கியூப்' தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் காட்சிகள் திரையிடப்படும் வசதி இதன்மூலம் கிடைக்கிறது.

அத்துடன் ஒலி அமைப்புகள் துல்லியமாக கேட்கும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. எனவே கர்ணன் டிஜிட்டல் படத்தில் இருந்த கரகர சத்தங்கள் இதில் இருக்காது. ஒலி துல்லியமாகவும், புதுமையாகவும் இருக்கும். ரூ.10 லட்சம் செலவில் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X