சிவாஜி வீட்டில் விசேஷம்.. காதலியை கரம் பிடிக்கும் சிவாஜியின் பேரன் தர்ஷன்!

சென்னை: செவாலியர் விருது, பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதாசாகெப் பால்கே விருது என பல விருதுகளை வாங்கி தமிழர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரின் மூத்த மகள் ராம்குமாரின் மகனான தர்ஷன் தனது காதலியை கரம் பிடிக்க உள்ளார். இவர்களின் திருமணம் நாளை எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

சிவாஜி கணேஷன் தனது உறவுக்கார பெண்ணான கமலா என்பவர் 1952ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ராம்குமார், பிரபு என இரண்டு மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில், பிரபு தந்தையைப் போலவே பல வெற்றித்திரைப்படத்தில் நடித்து நல்ல நடிகர் என பெயர் எடுத்து, தற்போதும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Sivaji Ganesan Ramkumar Dharshan
Photo Credit:

சிவாஜியின் மகன்: ஆனால், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், ஒரு சில படத்தில் நடித்தார். அந்த படங்கள் பெரிதாக எடுபடவில்லை. இவருக்கு துஷ்யந்த் மற்றும் இரட்டைக் குழந்தைகளான தர்ஷன் மற்றும் ரிஷ்யன் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில், துஷ்யத் ஒரு சில படத்தில் நடித்து இருந்தார். அது ஒர்க் அவுட்டாகாததால், ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்து பிரச்சனையில் சிக்கிக்கொண்டார். இவர்களில் ரிஷ்யன் வெளிநாட்டில் படித்து விட்டு அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. சினிமா மீது ஆர்வம் கொண்ட தர்ஷன் புனே திரைப்படக் கல்லூரி மற்றும் டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா ஆகிய இடங்களில் பயிற்சி எடுத்துள்ளார். இவர் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு பூஜா என்கிற பெண்ணை காதலித்ததாகத் தெரிகிறது.

பேரனுக்கு திருமணம்: இதைத்தொடர்ந்து தர்ஷன் தனது பெற்றோரிடம் காதலை சொல்லிய நிலையில், டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் அன்னை இல்லத்தில் நடந்தது. இதையடுத்து நாளை சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது. பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் மாப்பிள்ளை அழைப்பு, மெஹந்தி, சங்கீத் என நேற்றில் இருந்து திருமண கொண்டாட்டம் தொடங்கி உள்ளது. திருமணம் நாளை காலை நடைபெற உள்ளநிலையில், நாளை மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிச்சயத்தை போல திருமணத்தையும் சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்து எளிமையாக நடித்த உள்ளனர். இவர்களின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X