அந்த நடிகையின் படத்தால்தான் சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு இந்த நிலைமையா?.. அழுதுவிட்ட பிரபு!

சென்னை: செவாலியே, நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். அவரை நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் திரைத்துறையினர் புகழ்வார்கள். கமல் ஹாசன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் என ஏராளமானோர் சிவாஜி கணேசனின் நடிப்பைத்தான் தங்களுக்கு நடிப்பின் இலக்கணமாக கொண்டிருந்தவர்கள். சூழல் இப்படி இருக்க அவரது அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில் பிரபு அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது.

சிவாஜி கணேசன் என்றால் இந்திய சினிமாவில் அறிமுகம் தேவையில்லை. அவரது பெயரே இந்திய சினிமாவின் அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு சினிமாவுக்குள் வந்தவர்; தனது அபாரமான நடிப்பு திறமையால் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கட்டிப்போட்டார். அதனால் அவரை அனைவரும் நடிகர் திலகம் என்று அழைப்பார்கள். தொடர்ந்து ஹீரோவாக நடித்துவந்த அவர்; காலப்போக்கில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். கடைசியாக படையப்பா படத்தில் நடித்த அவர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அன்னை இல்லம்: இதற்கிடையே அவருக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இவர்களில் பிரபு ஃபேமஸான நடிகர். சிவாஜி கணேசன் சென்னை தியாகராய நகரில் ஒரு வீட்டினை வாங்கி அதற்கு அன்னை இல்லம் என்று பெயர் சூட்டினார். அந்த வீட்டுக்கு பிரதமர் முதல் முதலமைச்சர்வரை ஏகப்பட்ட விஐபிக்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அன்னை இல்லம் என்றாலே கோயில் என நினைக்கும் சினிமாக்காரர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகர் அமிதாப் பச்சன் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னை வந்தபோது அன்னை இல்லத்துக்கு வந்து விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தார். அந்த வீட்டினை சினிமாக்காரர்கள் தவிர்த்து கடைக்கோடி ரசிகனும் கண்டுகளிக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்காக வெளியூரிலிருந்து சென்னை வந்து அந்த வீட்டை வெளியிலிருந்து ரசித்துவிட்டு சென்றவர்களின் கதையும் ஏராளம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Sivaji Ganesan s son Prabhu Cries To Rajan for his Annai Illam

அன்னை இல்லத்துக்கு வந்த விபரீதம்: ஆனால் சிவாஜியும், அவரது மனைவி கமலமும் மறைந்த பிறகு அவரது பிள்ளைகளுக்குள் சொத்து தகராறுகள் ஏற்பட தொடங்கின. அது ஒருபக்கம் இருக்க தற்போது அன்னை இல்லத்துக்கு ஒரு விபரீதம் வந்திருக்கிறது. அதாவது சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் சக்சஸ், மச்சி உள்ளிட்ட மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் ஹீரோவாக அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட தயாரிப்பில் தனது மனைவி அபிராமியுடன் இறங்கினார் அவர்.

ஜகஜால கில்லாடி: அதாவது அவர் ஈசன் புரொடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரை வைத்து எழில் இயக்கத்தில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தை தயாரித்தார். அந்தப் படத்துக்காக மூன்று கோடி ரூபாய்வரை கடனாகவும் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்தக் கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக அந்த கடன் தொகை வட்டியோடு 9 கோடி ரூபாய்வரை உயர்ந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்தத் தொகையை மீண்டும் தர வேண்டும் என துஷ்யந்த்துக்கு கடன் கொடுத்த தரப்பு நீதிமன்ற படிகள் ஏறியது.

Sivaji Ganesan s son Prabhu Cries To Rajan for his Annai Illam

வீட்டை ஜப்தி செய்யுங்கள்: இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் துஷ்யந்த் கடனை கொடுக்காததால் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் காட் ஃபாதர் என அழைக்கப்படும் சிவாஜியின் குடும்பத்துக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள். மேலும் நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் நடித்த படத்தால்தான் சிவாஜி குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே என்றும் ஒருதரப்பினர் வேண்டுமென்றே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கிடையே இந்த வீடு ராம்குமார் பெயரிலோ அல்லது துஷ்யந்த் பெயரிலோ இல்லை. மாறாக நடிகர் பிரபுவின் பெயரில் இருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

கே.ராஜன் பேச்சு: இந்த விவகாரம் பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கும் சூழலில் தயாரிப்பாளர் கே.ராஜன் இந்த விவகாரம் குறித்து உருக்கத்துடன் பேசியிருக்கிறார். பட விழா ஒன்றில் பேசிய அவர், "ஒரு செய்தி போன வாரம் என்னை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கதற விட்டுவிட்டது. கதிகலங்க வைத்துவிட்டது. அதுதான் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி என்கிற செய்தி. தமிழை, தமிழ்நாட்டை, தமிழ்நாடு மக்களை தனது நடிப்பின் மூலமாக உலக அளவில் கொண்டு போய் சேர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

உலகளவில் சேர்த்தார்: திருக்குறள் எப்படி நமது தமிழை உலகம் முழுவது கொண்டுபோய் சேர்த்ததோ அதேபோல் நடிப்புலகில் தமிழ்நாட்டை உலகளவில் கொண்டு சென்று சேர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜி. 250 படங்களுக்கும் அவர் நடித்தார். கட்டபொம்மன், திருவிளையாடல் என விதவிதமான படங்களில் நடித்து தமிழ்நாட்டை உலக அளவில் அடையாளப்படுத்தியவர். அவரது நடையில், கன்னத்தில் என அனைத்திலும் நடிப்பு இருந்தது. அப்படி இருந்து சினிமாவை உயர்த்திய நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தியாகப்போகிறது என்று பலரும் கதறினார்கள், பதறினார்கள்.

Sivaji Ganesan s son Prabhu Cries To Rajan for his Annai Illam

நானும், பிரபுவும் அழுதோம்: சிவாஜி கணேசனின் குடும்பத்துக்கா இந்த நிலைமை என்று நான் அழுதுவிட்டேன். அதை யாரோ யூடியூபில் போட்டுவிட்டார்கள். அது ட்ரெண்டாகிவிட்டது. உடனே அதை பார்த்துவிட்டு சிவாஜியின் இளைய மகன் பிரபு எனக்கு ஃபோன் செய்தார். அப்போது அவர் என்னிடம் 'அண்ணே உங்களது பேச்சை கேட்டு நான் அழுதுவிட்டேன் அண்ணா. அதில் பாதிதான் உண்மை அண்ணா' என்று கூறினார். மேலும் அவர் என்னிடம், 'அந்த வீட்டை அப்பா எனது பெயரில்தான் எழுதியிருக்கிறார். அதை மாற்றி ஏதோ செஞ்சிருக்காங்க அண்ணேன். அதெல்லாம் வெளியில் சொல்ல முடியவில்லை. குடும்பத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அதனால் நீங்கள் எல்லாம் வணங்குகிற சிவாஜி கணேசனின் வீட்டை கண்டிப்பாக நான் ஜப்தியாக விடமாட்டேன் அண்ணே என்று கூறினார்" என்றார்.

அவ்வளவு பாசம்: முன்னதாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருசிலர் மீது தணியாத பாசம் கொண்டிருந்தவர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். ஒருமுறை சிவாஜி கணேசனை பார்த்த அவர்; சென்னைக்கு வந்தால் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனடியாக சிவாஜி கணேசனோ தனது அன்னை இல்லத்திலேயே ஒரு அறையை நல்ல வசதிகளுடன் லதா மங்கேஷ்கருக்கு ஏற்பாடு செய்துகொடுத்தாராம். அதனைத் தொடர்ந்து எப்போது லதா சென்னைக்கு வந்தாலும் சிவாஜி வீட்டில்தான் தங்குவார். மேலும் தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்தால் அண்ணன் என்கிற முறையில் லதா மங்கேஷ்கருக்கு சீர் அனுப்புவாராம் சிவாஜி கணேசன். அதேபோல் லதாவும் சென்னைக்கு வந்தால் சிவாஜியின் குழந்தைகளுக்கு ஏராளமான கிஃப்ட்கள், சாக்லேட்டுகளை வாங்கிவருவாராம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X