கர்ணன்.. கட்டபொம்மனை யார் பார்த்தா.. அதை கண்ணில் காட்டிய நடிகர் திலகத்தின் நினைவு தினம் இன்று!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Recommended Video
கர்ணன், கட்டபொம்மன், சிவன், வீரபாகு, கொடிகாத்த குமரன், பகத் சிங், ராஜ ராஜ சோழன், நாரதர் இன்னும் பல நூறு கதை மாந்தர்களை நம் கண் முன் கம்பீரமாக காட்சிப்படுத்திய ஈடு இணையற்ற திரை அளுமை சிவாஜி கணேசனின் பூத ஊடல் இந்த மண்ணை விட்டு மறைந்த தினம் இன்று.
அந்த உயர்ந்த உள்ளத்தை தெய்வ மகனை நினைக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. #SivajiGanesan என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் செவாலியர் சிவாஜியை நினைத்து வருகின்றனர்.

19வது ஆண்டு நினைவு தினம்
1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த கணேசன், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் எனும் மேடை நாடகத்தில் சத்ரபதி சிவாஜியின் மறு அவதாரமாக நடித்து அசத்தியதில் இருந்து சிவாஜி கணேசனாக மாறினார். கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக தனது 72வது வயதில் மறைந்தார் சிவாஜி கணேசன். இன்று அவரது 19வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நடிகர்களின் குல தெய்வம்
முன்னோர்களை குல தெய்வமாக வழிபடும் மரபு தமிழர் மரபு. அப்படி பார்த்தால், நடிகர்களின் குல தெய்வமாக சிவாஜி கணேசனும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நடிகர் திலகத்தின் இந்த தீவிர ரசிகர், நடிகர்களின் குல தெய்வம் மறைந்த தினம் இன்று என சிவாஜி கணேசன் நடித்த படங்களின் தொகுப்பு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

சரித்திரம் – சாதனை - சகாப்தம்
"மனித நேயத்தில், திரையுலக வரலாற்றில் நடிகர் திலகம் படைத்தது சரித்திரம்-சாதனை-சகாப்தம், தங்கள் நினைவைப் போற்றுகிறோம்! வணங்குகிறோம்!" என பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்திற்கு பதிவு போட்டிருக்கிறார்.

மார்லன் பிராண்டோ
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இந்திய சினிமாவின் மார்லன் பிராண்டோ என அழைப்பதை அறிந்த நடிகர் மார்லன் பிராண்டோ, தன்னை ஹாலிவுட் சிவாஜி என்று அழைக்கும் அளவுக்கு தான் இன்னும் நடிக்கவில்லை என கூறியதாக ஒரு குட்டி ஸ்டோரி இருக்கு. அதனை இந்த ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

என் அப்பா அழுதார்
சிம்மக் குரலோன், நடிப்பின் தந்தை என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆன நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தார் என்ற செய்தியை கேட்டு, என் தந்தை கதறி கதறி அழுதார். வீட்டில், சிவாஜி கணேசனின் பழைய பாடல்களை சத்தமாக போட்டுக் கேட்டார் என இந்த ரசிகர் நிஜ நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார். இது போல கோடான கோடி ரசிகர்கள் சிவாஜியை இன்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் மனதில் என்றுமே மறையாமல் இருப்பார் சிவாஜி.


Click it and Unblock the Notifications











