சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பு அயலான்.. டைட்டிலே மாஸா இருக்கு.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் 14வது படத்திற்கு அயலான் என பெயரிடப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் தனது இயல்பான நடிப்பு மற்றும் ஹியூமர் சென்ஸால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 14வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

அதாவது நேற்று இன்று நாளை படம் புகழ் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படத்தின் தலைப்பை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

வெளியிட்ட ரஹ்மான்

அதன்படி ஷார்ப்பாய் 5 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் பெயரை வெளியிட்டார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். படத்திற்கு அயலான் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதலே #SK14 என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரென்ட்டாக்கி வந்தனர்.

அட்டகாசம்

இந்நிலையில் படத்தின் தலைப்பு அட்டகாசமாய் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படத்தின் தலைப்பு அயலான் என உள்ளதால் சிவகார்த்திகேயன் வேற்று கிரகவாசியாக நடிக்கிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டைட்டில் டிஸைனே சூப்பர்.. அதுக்குமேல பிஜிஎம், சிலிர்க்க வைக்குது.. என ரசித்து கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

கொல மாஸ்

பலரும் டைட்டிலுக்கு போடப்பட்டுள்ள பிஜிஎமை புகழ்ந்துள்ளனர். வெறித்தனம் பிஜிஎம் வேற லெவல். அப்புறம் டைட்டில் அயலான் பங்கம்.. அடுத்து ஃபர்ஸ்ட் லுக்தான் பிப்ரவரி 17 தலைவனோட பர்த்டேல பாக்க வெறலெவல் எக்ஸைட்மென்ட் இருக்கு என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். கொல மாஸ் எஸ்கே14 ரவிகுமார் டைரக்ஷன் அன்ட் ஏஆர் ரஹ்மான் மியூஸிக் என கூறியிருக்கிறார்.

ஹாலிவுட் கலைஞர்கள்

அயலான் படம் அறிவியல் சார்ந்த படம் என்பதால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன என ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இரவு பகல் பாராமல் கிராபிக்ஸ் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X