SK x ARM Title: விஜய்யின் துப்பாக்கியை வாங்கிய SK .. டைட்டிலை வாங்கமாட்டாரா? SK காட்டில் யோக மழை!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 23 வது படம். ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வர உள்ளது என படக்குழு சார்பில் ஏற்கனவே கூறப்பட்டது. இப்படி இருக்கும்போது, சிவகார்த்திகேயனின் 23வது படம் என்பது, விஜய் படத்தின் அடுத்த பாகம் என கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார். இது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகராகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம், அமரன், பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சனத்திலும் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக மாறியது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். படம் உலகம் முழுவதும் ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இதனால் தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், விஜய் மற்றும் கமல்ஹாசனுக்கு பிறகு ரூபாய் 350 கோடிகள் வசூல் குவித்த நடிகராக மாறினார்.

தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதாவது, முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 24 வது படம் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் 25 வது படம் என மூன்று படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். அமரன் படம் கொடுத்த ஹிட், தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை நம்பி பல கோடிகளை இறக்கி வருகிறார்கள். இதில் 25 வது படத்தின் டைட்டில் ஏற்கனவே அறிவித்தாகிவிட்டது. அதாவது சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
SK x ARM :இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் இன்று அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் உடன் பணியாற்றி வரும் 23வது படத்தின் டைட்டிலை இன்று அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படியான நிலையில் படத்தின் பெயர் என்ன என்ற ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால் படத்தின் பெயர் அவரது இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படத்தின் பெயராக இருக்குமோ என்ற பேச்சும் திரைத்துறையில் உலா வருகிறது.

துப்பாக்கி: அதாவது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் துப்பாக்கி. இந்த படத்தில்தான் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் முதல் முறையாக இணைந்தனர். இந்த படம் இந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் கொடுத்த வெற்றி, அதன் பின்னர், கத்தி, சர்கார் என இவர்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக தொடர்ந்தது. அதன் பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரஜினி நடித்த தர்பார் படம் சரியாகப் போகவில்லை. அதற்கு பல காரணங்கள் திரைக்குப் பின்னால் நடைபெற்றது. இப்படி இருக்கும்போது, ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் துப்பாக்கி 2 அல்லது வேறு ஏதாவது பெயருடன் சேர்த்து துப்பாக்கி கண்டினியூஸ் என படத்தின் டைட்டில் உடன் சேர்ந்து வரும் என கூறப்படுகிறது.

டைட்டில்: ஏற்கனவே, விஜய் மற்றும் முருகதாஸ் இருவரும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் உலா வந்தது. இப்படி இருக்கும்போது, விஜய் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால், அதே கதையை வைத்து சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு துப்பாக்கி 2 என பெயர் வைக்கலாமா என்று கூட யோசித்துள்ளனர். தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதால், இந்த படத்திற்கு என தனி டைட்டிலை வைத்துக் கொண்டும், கூடவே துப்பாக்கி 2 அல்லது துப்பாக்கி கன்டினியூஸ் என்ற டேக் லைனுடன் படத்தின் டைட்டிலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வமான டைட்டில் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











