SK 25:பராசக்தி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்.. வில்லத்தனத்தில் மிரட்டும் ரவி மோகன்.. படக்குழு அதிர்ச்சி
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் படம் என்றால் அது அவரது 25 வது படமான பராசக்தி படம் தான். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சுதா கொங்கரா எழுதி இயக்குகிறார். ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அதன் பின்னர் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனால் தற்போது தனது 25 வது படமான பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தமிழ்நாடு, இலங்கை என வேகமாக நடைபெற்று வருகிறது.
படக்குழு தரப்பில் இருந்து ஏற்கனவே, ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இது மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டீசரைப் பார்த்த அனைவரும் இந்த படத்தை சூர்யா மிஸ் செய்து விட்டாரே எனத் தெரிவித்தார்கள். சூர்யா முதலில் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகி அதன் பின்னர், வெளியேறினார். சூர்யா கமிட் ஆனபோது, இந்த படத்தின் பெயர் புறநானூறு என இருந்தது. மேலும் இந்த படத்தை சூர்யாவே, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க முன்வந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் வெளியேறியதால் படத்தின் டைட்டில் பராசக்தி என வைக்கப்பட்டது. இந்த டைட்டில் மறைந்த மூத்த நடிகர் சிவாஜி அறிமுகமான படத்தின் டைட்டில் பராசக்தி என்பதாலும் இந்த படத்தின் மீது ஹைப் எகிறியுள்ளது.
லீக்: படத்தின் கதை என்பது ஹிந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போர் கதைக்களைத்தை மையமாகக் கொண்டது என கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் கமிட் ஆனவர் சூர்யா. சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து வெளியேற, இந்த படத்தை சிவகார்த்திகேயன் கேட்டு வாங்கி நடித்துக் கொடுத்துக் கொண்டு உள்ளார். ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதர்வா, ஸ்ரீலீலா, பிரித்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகனின் காட்சிகளை படப்பிடிப்புத் தளத்தில் இருந்து யாரோ ஒருவர் தனது மொபைலில் படம் பிடித்து அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த வீடியோவை பார்த்தவர்கள், ரவி மோகன் வெறித்தனமான வில்லத்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டு உள்ளார். அட்டகாசமான வில்லன் இந்த படத்தில் இருப்பது உறுதி என கமெண்ட் அடித்து வருகிறார்கள். ஆனால் படக்குழுவினருக்கு இந்த காட்சிகள் இணையத்தில் பரவுவது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இந்த வீடியோ வெளிநாட்டில் எடுக்கப்பட்டபோது யாரோ ஷூட்டிங் ஸ்பாட்டில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்கள் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறாரக்ள்.


Click it and Unblock the Notifications











