Sivakarthikeyan Birthday: அவனின்றி அணுவும் அசையாது.. பிறந்த நாளில் அண்ணாமலையாரை குடும்பத்துடன் வணங்கிய SK

திருவண்ணாமலை: நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனுடன் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்கச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கும் தெரியும், ”அவனின்றி (ஈசன்) அணுவும் அசையாது” என்பது. அதனால் தான் தனது பிறந்த நாளில் சிவனை வழிபட குடும்பத்துடன் வந்துள்ளார் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Sivakarthikeyan 41st Birthday Sivakarthikeyan visits Tiruvannamalai with family
Photo Credit:

சிவகார்த்திகேயன் 26ஆவது படமான சேயோன் படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என இரண்டுமே நேற்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது படம் வெற்றி தோல்விகளைக் கடந்து மினிமம் கேரண்டி என்ற வசூலை தொடர்ந்து அள்ளி வருவதால், இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் அவர் சேயோன் படத்தின் கதையை ஓ.கே. செய்ய திரைத்துறையில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

சேயோன்: அதாவது, நேற்று வெளியான சேயோன் பட அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதை சிவகார்த்திகேயனின் பலமான ஜனரஞ்சகமான கதைக்களம் என்று கூறப்படுகிறது. படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி உள்ள படமான தாய் கிழவி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தான். அவரது எஸ்‌.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. இந்த கதை அதற்கு ஏற்ற திரைக்கதை அமைத்தது மட்டும் இல்லாமல், படத்தை மிகவும் ஜன ரஞ்சகமாகவும் எடுத்துக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் செல்வக்குமார் முருகேசன். தாய் கிழவி படம் வரும் 27ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகவுள்ளது என்றாலும், படத்தை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட நம்பிக்கையும் திருப்தியும் தான் செல்வக்குமார் முருகேசனுடன் இணைந்து ஒரு படம் பணியாற்றலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் பின்னர் தான் படத்தின் கதையை கமலிடம் சொல்லி, அவரை தயாரிக்க கேட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X