அழகோ அழகு... செம கியூட்டாக இருக்கும் SK - ஆர்த்தி ஜோடி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, எஸ்கே24 ஆகிய படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தின் 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், தனது சம்பளம் குறித்து பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையல், சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் சிறு வயத புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் ரசிகர்கள் அண்ணனும், அண்ணியும் சூப்பர் என கமண்ட் செய்து வருகின்றனர்.

முதல் காதல் தோல்வி: காதலிக்காமல் யாரும் இல்லை, குறிப்பாக நடிகர், நடிகைகள் தங்களது வாழ்வில் கடந்து வந்த வலிகளையும், காதல் தோல்வியையும் கண்ணீரோடு தெரிவிப்பர். ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் அதுமாதிரியான காதல் கதையாக இல்லாவிட்டாலும், ஒன்சைடாக ஒரு பெண்ணை காதலித்து தோல்வியுற்ற அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். அதில், விஜய் டிவியில் பணியாற்றிய போது ஒரு ஷாப்பிங் மாலில் அந்த பெண்ணை பார்த்தேன்.

Sivakarthikeyan Aarti sk family Photos

அப்போது அந்த பெண்ணிடம் பேசவில்லை. ஒன்சைடாக காதலித்து வந்தேன். பின் ஒருநாள் அந்த பெண், அவர் காதலித்த பையனோடு இல்லாமல், வேறு ஒரு நபருடன் வந்திருந்தார். இதை பார்த்ததும், நமக்கு கிடைக்காத பெண் அவனுக்கும் கிடைக்கவில்லை என நினைத்து லைட்டா மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார். அது தான் என் வாழ்வில் வந்த முதல் காதல் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி திருமணம்: அதன் பின்னர் தனது உறவினர் பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஒரு பெண், 2 ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்து மழையில் நனைவார்கள். சிவகார்த்திகேயன் அவ்வப்போது தனது மனைவி ஆர்த்தியை பெருமையாக பேசி மகிழ்வார்.

ஆர்த்தியை சர்ப்ரைஸ் செய்த SK: அமரன் படம் வெளியான சமயத்தில் ராணுவ உடையில் வீட்டிற்கு சென்று மனைவி ஆர்த்தியை சர்ப்ரைஸ் செய்திருப்பார். ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். முன்பு நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், தனது மனைவியை புகழ்ந்து தள்ளினார். அப்போது நான் பெரிய நடிகன் கிடையாது, சம்பாத்தியம் பெரிதளவில் இல்லை, என்னை நம்பி திருமணம் செய்துகொண்டார். இப்போது பிஸியாக இருக்கிறேன் குடும்பத்தை பொறுப்பாக பார்த்து கொள்கிறார். உண்மையில் நான் பாக்கியசாலிதான் என தெரிவித்திருந்தார். சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு ஆரதனா என்ற மகளும், குகன், பவண் என இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Aarti sk family Photos

க்யூட்டான புகைப்படம் வைரல்: சிவகார்த்திகேயன் தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் கலகலப்புடன், பார்த்து கொள்வார். அவருடன் இருந்தால் சிரித்துகொண்டே இருக்கலாம் என விஜய் டிவியில் பணியாற்றிய பல டெக்னிசியன்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படம் வொளியாகியுள்ளது. அண்ணனும் அண்ணியும் செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமண்ட் செய்கின்றனர். சிறுவயதில் கண்ணத்தில் குழி விழும் அளவிற்கு சிரிக்கும் ஆர்த்தியின் அருகில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். செம ஜோடிப்பா என பலரும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X