Sivakarthikeyan: படப்பிடிப்பில் நடந்த விபத்து... சிவகார்த்திகேயன் செய்த உதவி... நெகிழ்ந்த பிரபலம்!

சென்னை: சின்ன திரையில் இருந்து சினிமாவில் சாதித்த நடிகர்களில் சிவகார்த்திகேயன் முக்கியமானவர்.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்ற இடத்தை பிடித்துவிட்டாலும் இன்றும் தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராக பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார்.

அப்படி அவர் செய்த ஒரு பெரும் உதவி குறித்து நடிகர் முனிஷ்காந்த் மனம் திறந்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் செய்த பெரும் உதவி:விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். போட்டியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என கலக்கி வந்த சிவகார்த்திகேயன், மெரினா படம் மூலம் வெள்ளி திரையில் அடியெடுத்து வைத்தார். அங்கிருந்து தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், மிகக் குறுகிய காலத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

 Sivakarthikeyan: Actor Munishkanth opens up about Sivakarthikeyans help as a camera assistant

சிவகார்த்திகேயனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் சிவகார்த்திகேயனின் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார். இதுகுறித்து அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் செய்த பெரும் உதவி குறித்து நடிகர் முனிஷ்காந்த் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். 2003ம் ஆண்டு முதல் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் நடித்துள்ள முனிஷ்காந்த், முண்டாசுப்பட்டி, மாநகரம் படங்கள் மூலம் லைம் லைட்டில் வந்தார். தொடர்ச்சியாக ரஜினி, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

2023ம் ஆண்டு மட்டும் இதுவரை முனிஷ்காந்த் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ள முனிஷ்காந்த், அவர் நடித்த படங்கள் பற்றியும் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதேபோல், முன்னணி நடிகர்களுடன் நடித்தது குறித்து பேசிய முனிஷ்காந்த், சிவகார்த்திகேயன் குறித்து நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு விபத்து நடந்துள்ளதாம். அதில் கேமரா அசிஸ்டண்ட்டாக பணிபுரிந்த இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரே போகும் நிலைக்கு ஆளாகியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும், அவர் உயிர்பிழைக்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எனக் கூறி, 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தாராம்.

சிகிச்சைக்குத் தேவையான மொத்த பணத்தையும் சிவகார்த்திகேயனே கொடுத்து அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளார். வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோதே எதைபற்றியும் யோசிக்காமல் 50 லட்சம் வரை செலவு செய்த சிவகார்த்திகேயன் இப்போதும் அதேபோல் தான் இருக்கிறார் என முனிஷ்காந்த் மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X