சிவகார்த்திகேயனுடன் ஜிம்மில் செட்டு சேர்ந்த பிரபல நடிகை... அந்த ஒர்க்அவுட் கேப்ஷன் தான் தாறுமாறு!
சென்னை: சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.
பத்தே ஆண்டுகளில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராகவும் வலம் வரத் தொடங்கிவிட்டார்.
இந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் பிரபல நடிகை ஒருவர் ஒன்றாக ஜிம் சென்று ஒர்க்அவுட் செய்வது வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனுடன் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் நடிகை: சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மண்டேலா திரைப்படம் மூலம் பிரபலமான மடோன் அஸ்வின் மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மாவீரன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான் பட ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்தது. இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவீரன், அயலான் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயன் பிரபல நடிகையுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போட்டோ வைரலாகி வருகிறது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, கன்னித்தீவு போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. இவரும் சிவகார்த்திகேயனும் ஒரே ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து வருகின்றனர். அப்போது சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த ஆஷ்னா ஜவேரி அவருடன் போட்டோ எடுத்துள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயனுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள ஆஷ்னா ஜவேரி, "நீங்கள் இங்கே ஒர்க்அவுட் செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விதவிதமாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். சர்ச்சைகளில் சிக்காத சிவகார்த்திகேயனுக்கு இப்படியும் ஒரு ரசிகையா என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

நடிகைகள் விசயத்தில் சர்ச்சைகளில் சிக்காத நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அப்படியிருக்க ஒரே ஜிம்மில் நடிகையுடன் ஒன்றாக ஒர்க்அவுட் செய்கிறாரா சிவகார்த்திகேயன் என்றெல்லாம் கமெண்ட்ஸ்கள் வந்து குவிகின்றன. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆஷ்னா ஜவேரி தான் நாயகியா எனவும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











