Maaveeran: “சிவகார்த்திகேயன் ஒரு குட்டி ரஜினி”... அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பம்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவீரன் படத்தின் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மாவீரன் படக்குழுவினர் ரசிகர்கள் முன் உரையாடினர்.

அப்போது பேசிய நடிகை சரிதா, சிவகார்த்திகேயனை குட்டி ரஜினி என அழைப்பேன் என சொன்னது வைரலாகி வருகிறது.

 Sivakarthikeyan: Actress Saritha praises that Sivakarthikeyan looks like superstar Rajinikanth

சிவகார்த்திகேயன் ஒரு குட்டி ரஜினி: மெரினா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இப்போது தமிழ்த் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.

சிவகார்த்தியேனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் மாவீரன் படத்தில் நடித்துள்ளனர். 1970, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரிதா, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சரிதா, சிவகார்த்திகேயன் பற்றி பேசியது பயங்கர வைரலாகி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயனை ஒரு குட்டி ரஜினி எனக் கூறி ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் லுக், அவர் பேசும் ஸ்டைல் போன்றவற்றை பார்க்கும்போது ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் எனக் கூறியுள்ளார். அதானால் சிவாவை குட்டி ரஜினி என்றே அழைப்பேன் எனவும் சரிதா பேசினார்.

சிவகார்த்திகேயனை குட்டி ரஜினி என நடிகை சரிதா கூறியது, ரசிகர்களால் பயங்கரமாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் கடந்த சில மாதங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என பிள்ளையார் சுழி போட்டு வைத்தார் சரத்குமார். இதனால் ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் ஏற்பட்டது.

இப்போது சிவகார்த்திகேயனை ஒரு குட்டி ரஜினி என சரிதா கூறியது மீண்டும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை தொடங்கி வைத்துள்ளது. சிம்பு, தனுஷ் ஆகியோரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேனரிசத்துடன் நடித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயனும் இந்த போட்டியில் இணைந்துள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது. ஆனாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த கன்டெண்டை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X