மாணவர்களுக்காக சத்தம் போடாமல் நடிக்கும் சிவகார்த்திகேயன்
எந்த ஒரு தகவல்களும் இல்லாமல் திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில்பகிரப்பட்டு வருகிறது.
சென்னை: எந்த ஒரு தகவல்களும் இல்லாமல் திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில்
பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து இயக்குநர் திரு சமூக வலைதளத்தில் கூறுகையில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நான் படம் பண்ணுவது உண்மை தான் ஆனால் அது நீங்கள் நினைக்கும் அளவிற்கு பெரிய படம் ஒன்றும் இல்லை.நான் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப்படத்தில் பணியாற்றி வருகிறேன், இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நல்ல காரியத்திற்காக எடுக்கப்படுகிறது.

நாங்கள் இருவரும் முழு முனைப்புடன் இந்தப் படத்தில் பணியாற்றுகிறோம், இது குறித்த தகவல்கள் மிக விரைவில் விளக்கமாக கூறுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் ஆவணப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏன் என்றால் அந்த புகைப்படத்தில் வரும் கரும்பலகை, பேனா போன்றவை பள்ளி சார்ந்த விஷயமாக உள்ளன.


Click it and Unblock the Notifications











