Sivakarthikeyan - சிங்கத்தை தத்து எடுத்த சிவகார்த்திகேயன் - ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) நடிகர் சிவகார்த்திகேயன் 3 வயது ஆன சிங்கக்குட்டியை தத்து எடுத்திருக்கும் சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் இணைந்துவிட்டார். மேலும் சிவகார்த்திகேயனை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம் என்ற நம்பிக்கையும் கோலிவுட் தயாரிப்பாளர்களிடம் உருவாகியிருக்கிறது.

பிரின்ஸ் கொடுத்த அடி: ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப்போகும் விதமாக பிரின்ஸ் படத்தின் ரிசல்ட் அமைந்தது. தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை வளர்க்கும் நோக்கத்தில் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. சொல்லப்போனால் அவரது கரியரில் மோசமான தோல்வி படங்களின் வரிசையில் இணைந்தது. மேலும் ரிலீஸான ஒரே வாரத்தில் படமும் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது.

Sivakarthikeyan adopted 3 year old Lion in vandalur zoo

சிவாவின் மாவீரன்: இப்படிப்பட்ட சூழலில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சி.கா. பிரின்ஸ் கொடுத்த மோசமான அனுபவத்தை மாவீரன் மூலம் மறக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரும் அவரது ரசிகர்களும் இருக்கின்றனர்.

படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் ஜூலை 2ஆம் தேதி நடக்கிறது. மாவீரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு சிங்கிள் வெளியாகியிருக்கின்றன. கடைசியாக வெளியான வண்ணாரப்பேட்டையில பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாடலை சிவகார்த்திகேயனும், அதிதி ஷங்கரும் பாடியிருக்கின்றனர்.

படத்தின் பூஜை: மாவீரன் படத்தில் நடித்து முடித்த பிறகு கமல் ஹாசனின் தயாரிப்பில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவா.ரங்கூன் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பூஜை சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மேலும் காஷ்மீரில் முக்கால்வாசி படத்தை ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

சென்னையில் ஷூட்டிங்?: இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே காஷ்மீரில் ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அண்மையில் ஷூட்டிங்கிற்காக படக்குழு அங்கு செல்லவும் செய்தது. ஆனால் ஏதோ சிக்கலால் மீண்டும் தமிழ்நாடு திரும்பிவிட்டது. தமிழ்நாடு திரும்பியதோடு மட்டுமில்லாமல் சென்னையில் இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்ததாகவும் புதிய பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

சிங்கத்தை தத்தெடுத்த சிவா: இப்படி சினிமாவில் படு பிஸியாக வலம் வரும் சிவகார்த்திகேயன் செய்திருக்கும் ஒரு விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதன்படி வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஷேரு என்ற மூன்று வயது ஆகும் ஆண் சிங்கக்குட்டி ஒன்றை சிவகார்த்திகேயன் தத்து எடுத்திருக்கிறார். 6 மாதங்களுக்கு சிங்கத்துக்குரிய செலவுகள் அத்தனையையும் சிவா கவனிக்கவிருக்கிறார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X