மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்.. ஆராதனா, குகனுக்கு தம்பி பாப்பா பொறந்தாச்சு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நேற்று இரவு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சந்தோஷ அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மெரினா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன் சினிமாவில் ஏகப்பட்ட எதிர்நீச்சல்களை போட்டு வருத்தப்படாத வாலிபராக தன்னை காட்டிக் கொண்டு மாவீரனாக உயர்ந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவே மாறியுள்ளார்.

Sivakarthikeyan boy baby Amaran Sivakarthikeyan Kids


சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சிவகார்த்திகேயன் 3 குழந்தைகளுக்கு தற்போது அப்பாவாக மாறியுள்ளார். சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3வது குழந்தை: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற போது ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சீக்கிரமே 3வது குழந்தைக்கு அப்பாவாக போகிறார் என வாழ்த்த ஆரம்பித்தனர். இந்நிலையில், ஜூன் 2ம் தேதியான நேற்று இரவு சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

தாயும் சேயும் நலம்: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி ஆர்த்திக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆண் குழந்தை பிறந்துள்ளார். தாயும் சேயும் நலம் உங்களுடைய ஆதரவு எப்போதும் வேண்டும் என 3வது குழந்தைக்கு அப்பாவான சந்தோஷத்தை ஷேர் செய்துள்ளார்.

தம்பி பாப்பா: 2010ம் ஆண்டு திருமணமான சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா எனும் பெண் குழந்தை முதலில் பிறந்தார். அதன் பின்னர் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பா பெயரான குகன் என்பதை சூட்டி அழகு பார்த்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், தற்போது 3வது குழந்தை பிறந்துள்ளது. ஆராதனா மற்றும் குகனுக்கு குட்டி தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளாமல் போக காரணமே இதுதானா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அமரன் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பாவான நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X