“தலைவர் 169“… யார் யார் நடிக்கிறாங்க தெரியுமா? … தரமான அப்டேட் !
சென்னை : ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் வேளையில், இப்படத்தில் இணைய உள்ள நடிகர்கள் குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
'தலைவர் 169' படத்தின் ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் தயாராக உள்ளதாம். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஷூட்டிங்கை படுவேகமாக முடித்து விட்டு அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது.

அண்ணாத்த
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். சிறுத்தை சிவா படம் என்றாலே சென்டிமென்ட் தூக்கலாகவே இருக்கும், அதுபோலவே இந்த திரைப்படத்திலும் அண்ணா, தங்கை பாசம் மேலோங்கி இருந்தது.

பல இயக்குநர்களிடம் கதை கேட்டார்
இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சன் பிக்சர்ஸ் மகத்தான வெற்றி என கூறி உள்ளது. இப்படி அண்ணாத்த திரைப்படம் குறித்து கலவையான விமர்சனம் எழுந்ததால், அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

தலைவர் 169
அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. ரஜினி கோட் சூட் அணிந்து கெத்தாக போஸ் கொடுத்திருந்தார்.

செம அப்டேட்
தலைவர் 169 திரைப்படம் குறித்த அப்பேட்டுகள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கசிந்து வரும் நேரத்தில், சிவகார்த்திகேயன் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், ஐஸ்வர்யா ராய் முதன்மை கதாபாத்திரத்திலும், பிரியங்கா மோகன் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பு
மேலும் இத்திரைப்படத்தில் நகைச்சுவைக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications