Amaran: நின்னு விளையாடும் அமரன்.. தளபதி பேர காப்பாத்திய சிவகார்த்திகேயன்.. தகர்க்கப்பட்ட விஜய் சாதனை

சென்னை: 'ஆனி போயி.. ஆடி போயி.. ஆவணி வந்தா அவன் டாப்புல வந்துடுவான்னு' களவாணி படத்துல சரண்யா டயலாக் பேசுவதைபோல், சிவகார்த்தியேன் திரைவாழ்க்கை அமரன் படத்திற்குப் பின்னர் டாப்பில் சென்று கொண்டு உள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் இப்போதும் பல திரையரங்குகளில் தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. படம் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. படம் வெளியான நாளில் இருந்து இப்போதுவரை தியேட்டரில் நின்னு விளையாடுகின்றது எனலாம். இந்நிலையில் அமரன் படம் புது சாதனையைப் படைத்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படத்தினை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. படத்தினை சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து கொண்டு தயாரித்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்தார்.

sivakarthikeyan amaran vijay goat

படம் மொத்தமாகவே ஒரு வெற்றிக் கூட்டணியாக அமைந்து விட்டதால், ரசிகர்கள் மத்தியில் அமரன் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தினைப் பார்த்த பலரும் படத்தினை வெகுவாக பாராட்டினர் என்பதைக் காட்டிலும் படத்தினை கொண்டாடினர் எனலாம். தீபாவளிக்கு தமிழில் பிரதர், ப்ளடி பெக்கர் போன்ற படங்களும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் ரிலீஸ் ஆகி இருந்தது. இதில் லக்கி பாஸ்கர் படம் மட்டும் இப்போதுவரை அமரனுடன் ஓடிக்கொண்டு உள்ளது. மற்ற இரண்டு படங்களும் தியேட்டரைவிட்டு வெளியே போய்விட்டது.

sivakarthikeyan amaran vijay goat

அமரன்: அதேநேரத்தில் லக்கி பாஸ்கர் படம் நேரடித் தெலுங்கு படம் என்பதால் தெலுங்கு பேசும் மாநிலங்களில் சிறப்பாக ஓடிக்கொண்டு உள்ளது. அமரன் படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். வசூல் ரீதியாக சிவகார்த்திகேயனை ரூபாய் 300 கோடிகளை வசூல் செய்ய வைத்தப் படம். சிவகார்த்திகேயன் படங்களில் அதிகம் வசூல் குவித்த படமாக அமரன் மாறியுள்ளது.

sivakarthikeyan amaran vijay goat

கோட்: மேலும் படம் திரையரங்கில் நல்ல வசூலைக் குவித்து வருவதால் படத்தினை ஓடிடி தளத்தில் ஒரு வாரத்திற்குப் பின்னர் ரிலீஸ் செய்ய நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கோட் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பின்னர், அவருக்கு விஜய் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்துவிட்டது எனலாம்.

sivakarthikeyan amaran vijay goat

சாதனை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்தினை அமரன் படம் ஒரு விஷயத்தில் முந்திச் சென்றுள்ளது. அதாவது புக் மை ஷோ தளத்தில் கோட் படம் மொத்தமாகவே 45 லட்சம் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருந்தது. இந்த சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் படம் 25 நாட்களில் முறியடித்துள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் அமரன் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் ஏற்கனவே ரூபாய் 300 கோடிகளை வசூல் செய்துவிட்டதால், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் டயர் 1 நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sivakarthikeyan amaran vijay goat

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X