Amaran Box Office: இந்தியன் 2 முதல் நாள் வசூலை முந்திய அமரன்.. இந்த ஆண்டின் 3வது மிகப்பெரிய ஓபனிங்!
சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்டார் என்பதை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் தனக்கென தனி இடத்தை பிடித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஜய், அஜித்துக்குப் பிறகு அடுத்த கட்ட நடிகர்களில் வசூல் வேட்டையை இனிமேல் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் எனும் ராணுவ வீரரின் பயோபிக் படத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை ஜனரஞ்சகமான படமாகவும் அனைவரும் பாராட்டக்கூடிய படமாகவும் தியேட்டரை விட்டு எமோஷனல் உடன் கண்ணீர் சிந்திக் கொண்டே வரும் படமாகவும் கொடுத்த இடத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

இந்த தீபாவளிக்கு வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்களை மகிழ்வித்தே அனுப்பியுள்ளதே தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டு ஏகப்பட்ட பெரிய படங்கள் ரசிகர்களை பெரிதும் திருப்திப்படுத்தவில்லை என்கிற நிலையில், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ள சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இந்த ஆண்டு முதல் நாளில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் நடத்திய படமாக மாறியுள்ளது.
கோட், வேட்டையனுக்கு அடுத்து அமரன் தான்: தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் தான் தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிகபட்சமாக 38 கோடி ரூபாய் வசூல் வேட்டையை நடத்தி முதலிடத்தில் உள்ளது. கோட் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் 20.50 கோடி ரூபாய் வசூல் வேட்டையை முதல் நாளில் நடத்தியது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 முதல் நாளில் 13.50 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 15 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 3வது இடத்தை பிடித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
உலகளவில் அமரன் வசூல்: தமிழ்நாட்டை தாண்டி டோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் அமரன் படத்துக்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியில் ஓரளவுக்கு ரசிகர்கள் இந்த படத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக பான் இந்தியா வெற்றியை அமரன் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அமரன் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 21 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 28 கோடி ரூபாய் வசூலை சிவகார்த்திகேயன் ஓபனிங் டேவிலேயே வசூல் செய்திருப்பது மிகப்பெரிய வெற்றி எனக் கூறுகின்றனர்.
புதிய ரெக்கார்டு: ராயன், மகாராஜா படங்களை விட ஓபனிங்கே சிவகார்த்திகேயன் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், கோட், வேட்டையன் படத்திற்கு பிறகு மொத்த வசூலிலும் 3வது இடத்தை கூடிய சீக்கிரமே சிவகார்த்திகேயனின் அமரன் படம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா திரைப்படமும் இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கங்குவா ரிலீஸ் ஆகும் வரை அமரன் படத்தின் வசூல் வேட்டை தொடரும் எனபது கன்ஃபார்ம். இந்த தீபாவளிக்கு வெளியான மற்ற படங்கள் நல்ல லாபத்தை ஈட்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் இந்த தீபாவளி வின்னர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











