Amaran Box Office Day 15: பாக்ஸ் ஆபிஸ் டானாக மாறிய SK.. 15 நாளில் வேற லெவல் கலெக்‌ஷன் ரெக்கார்ட்!

சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பயோபிக் படம் ஆகும். இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படியான நிலையில் படம் 15நாளில் எவ்வளவு வசூல் செய்ததது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

ஏற்கனவே கூறியதைப்போல் தமிழ்நாட்டினைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு படத்தினை எடுப்பதால், படத்தின் காட்சிகள் பெரும்பாலும், இந்திய ராணுவத் தளவாடங்களுக்கு நேரடியாகச் சென்று படத்தினைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இதற்காக இந்திய உள்துறை அமைச்சகத்திடம் படத்தின் கதையைக் ஒப்படைத்து, ஒப்புதல் பெற்று, படத்தின் படப்பிடிப்புகளை நடத்தியுள்ளனர். படப்பிடிப்பின்போது இந்திய ராணுவத்தினர் படக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

amaran box office collection sivakarthikeyan amaran

படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. குறிப்பாக சிவகார்த்திகேயன் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படத்தினைக் கொடுக்கப்போகின்றார் என அவரது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்தது. இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மும்பையில் துப்பாக்கிகளை கையாள்வது தொடர்பாக ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிறப்பு பயிற்சி எடுத்துள்ளார். நடிகை சாய் பல்லவியின் நடிப்பினை அனைவரும் பாராட்டினர். சாய் பல்லவி ஏற்று நடித்த, இந்து ரெபேகா வர்ஹீஸே சாய் பல்லவியைப் பார்த்து என்னைப் பார்ப்பதைப்போல் இருப்பதாகக் கூறி பாராட்டினார்.

அமரன்: படம் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆனதால் படத்தின் வசூல் மீதும் பெரும் கவனம் குவிந்தது. தமிழ் படம் என்பதால் தமிழ்நாட்டில் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் இந்திய ராணுவத்தினை மைய்யப்படுத்தி இருந்ததால், வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தீபாவளிக்கு தமிழில் அமரன் படத்துடன் பிரதர் மற்றும் ப்ளடி பெக்கர் என மொத்தம் 3 படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் வெற்றி பெற்றப் படம் என்றால் அது, அமரன் மட்டும்தான்.

amaran box office collection sivakarthikeyan amaran

வசூல்: அமரன் முதல் நாளே ரூபாய் 42.3 கோடிகளை அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. அதேபோல் படம் ரிலீஸ் ஆகி மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயன் படங்களிலேயே மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்த படமாக மாறியது. முதல் வசூலைப் பொறுத்தவரையில், சிவகார்த்திகேயன் படத்தில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாகவும் இது மாறியது.

amaran box office collection sivakarthikeyan amaran

250 கோடிகள்: படம் வெளியாகி நவம்பர் 9ஆம் தேதியுடன் 10 நாட்கள் ஆனது. அன்றைய தினத்தில் படம் ரூபாய் 200 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்ததாகபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் அதாவது நவம்பர் 14ஆம் தேதியுடன் 15 நாட்கள் ஆகின்றது. இந்த 15 நாட்களில் படம் ரூபாய் 251 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் ரூபாய் 180 கோடிகள் முதல் ரூபாய் 190 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வெளிநாடுகளில் ரூபாய் 60 கோடிகள் முதல் ரூபாய் 70 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயனின் இதற்கு முந்தைய படங்கள் எதுவும் இந்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. கங்குவா படம் ரிலீஸ் ஆன பின்னரும் படத்திற்கு காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருவதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு எதிர்பார்க்கின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X