Amaran Box Office Day 25: டாப் கியர்! வசூல் வேட்டையில் ஸ்லோவே கிடையாது.. அமரன் இதுவரை அள்ளிய கோடிகள்
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகச் சிறப்பாக இப்போதுவரை வசூல் வேட்டை நடத்தி வரும் படம் அமரன். பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திருப்தி அடையச் செய்ததால் படம் 25வது நாளைக் கடந்தும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு உள்ளது. அமரன் படத்தினைப் பொறுத்தவரையில், வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் குடும்ப ரசிகர்கள் ஆவலுடன் படத்தினைப் பார்த்தார்கள்.
இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்தனர். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியுள்ளதால் படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாட்டினைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு படத்தினை எடுப்பதால், படத்தின் காட்சிகள் பெரும்பாலும், இந்திய ராணுவத் தளவாடங்களில் நடத்தப்பட்டது. பல நேரங்களில் இந்திய ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமரன் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களிலேயே படப்பிடிப்பினை நடத்த, இந்திய உள்துறை அமைச்சகத்திடம் படத்தின் கதையைக் ஒப்படைத்து, ஒப்புதல் பெறப்பட்டத்த படத்தின் இயக்குநர் ராஜ்குமா பெரியசாமி கூறினார்.

அமரன் படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவல் இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக சிவகார்த்திகேயன் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. தயாரிப்பில் கமல்ஹாசன் இருப்பதால், சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படத்தினைக் கொடுக்கப்போகின்றார் என அவரது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்தது.

வரவேற்பு: படம் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆனதால் படத்தின் வசூல் மீதும் பெரும் கவனம் குவிந்தது. தமிழ் படம் என்பதால் தமிழ்நாட்டில் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் இந்திய ராணுவத்தினை மைய்யப்படுத்தி இருந்ததால், வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் இந்தப் படத்தினைப் பார்த்துக் கொண்டாடினர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ் மன்னன்: அமரன் முதல் நாளே ரூபாய் 42.3 கோடிகளை அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படம் என்றால் அது அமரன் மட்டும்தான். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததால் முதல் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயன் படங்களிலேயே மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்த படமாக அமரன் மாறியது. சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இந்தப் படம் மாற்றிவிட்டது.

மொத்த வசூல்: படம் வெளியாகி நேற்றுடன் அதாவது நவம்பர் 24ஆம் தேதியுடன் 25 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் படம் இந்த 25 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூபாய் 315 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதுமட்டும் இல்லாமல் படம் வார நாட்களில் தியேட்டர் ஓனர்களுக்கு நஷ்டத்தினைக் கொடுக்கவில்லை என்றாலும் வார இறுதியில் சக்கை லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் அளவிற்கு வசூலைக் குவிக்கின்றது. இப்படியான நிலையில் படம் தொடர்ந்து நல்ல வசூலைக் குவித்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











