Amaran Pre Booking: தரமான சம்பவம் செய்த சிவகார்த்திகேயனின் அமரன்.. ப்ரீ புக்கிங்கில் புதிய சாதனை!
சென்னை: தீபாவளிக்கு தமிழில் ரிலீஸ் ஆகவுள்ள படங்களிலேயே அதிக எதிர்பார்ப்பில் வெளியாகவுள்ள படம் சிவகார்த்திகேயனின் அமரன் படம்தான். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படமானது, வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில் அதில் சாதனையும் படைத்துள்ளது.
வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கினார். பொதுமக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் அவர் தனது உயிரினைத் தியாகம் செய்தார். குண்டு துளைத்த அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டபோது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் சென்று அவருக்கு வீர வணக்கம் செலுத்தினர். இவரது வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இப்படம் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகின்றது. எனவே, மேஜர் முகுந்த் எங்கெல்லாம் சென்றாரோ அங்கு நேரடியாகச் சென்று படப்பிடிப்பினை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். படக்குழுவினர் மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இந்திய ராணுவத் தளவாடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கிகளை கையாள சிறப்பு பயிற்சியே வழங்கப்பட்டது.
பாராட்டு: மேலும் படத்தின் மீது இது தனி மதிப்பையே ஏற்படுத்தியது. படத்தினைப் பார்த்த ராணுவ வீரர்கள் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். மேலும் சிவகார்த்திகேயனை ராணுவத்தில் இணைந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர். இப்படியான பாராட்டுகளுக்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் இன்னும் படத்துக்கான ப்ரீ புக்கிங் தொடங்கப்படவில்லை.

S.K 22: ஆனால் வெளிநாடுகளில் படத்தின் ப்ரீ புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இப்படம் சிவகார்த்திகேயனின் 22வது படம். சிவகார்த்திகேயனின் படங்கள் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்ட காலத்தில் இருந்து இவரது படங்களுக்கு கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் அமரன் படத்திற்கான வரவேற்பைப் போல் இதற்கு முந்தைய படங்களுக்கு கிடைத்ததில்லை. அதற்கு வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ப்ரீ புக்கிங் வசூல்: இப்படியான நிலையில்தான், அமரன் படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் தொடங்கியுள்ளது. படம் அக்டோபர் 31ஆம் தேதிதான் ரிலீஸ் என்றாலும், படம் இதுவரை சுமார் ரூபாய் 75 லட்சங்களுக்கு மேல் வசூல் குவித்துள்ளது. படம் ரிலீஸ் ஆக இன்னும் நான்கு நாட்கள் இடையில் உள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ புக்கிங் வசூல் இன்னும் அதிரிக்கும் என கூறப்படுகின்றது. மேலும் இதுவரை வசூல் ஆகியுள்ள தொகையே, சிவகார்த்திகேயன் படங்களில் வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கில் அதிக வசூல் செய்த படமாக அமரன் மாறியுள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











