300 கோடி வசூல் தான் டார்கெட்..? அட்டகாசமாக அமர்க்களப்படுத்தும் அமரன்.. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அமரன் திரைப்படம் 200 கோடி வசூலை இந்த வாரமே அசால்ட்டாக கடக்கும் என்கின்றனர். இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற அமரன் வெற்றி விழா மேடையிலேயே படம் 150 கோடி வசூலை அடைந்து விட்டதாக சிவகார்த்திகேயனே கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை போலவே ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அமரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வார நாட்களிலும் புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளத்தில் படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சிவகார்த்திகேயன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

amaran sivakarthikeyan box office

சினிமா பிரபலங்களை தாண்டி அரசியல் தலைவர்கள் பலரும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமரன் படம் 200 கோடி மட்டுமில்லை 300 கோடி வசூலை எட்டும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்: 20222ம் ஆண்டு தீபாவளிக்கு பிரின்ஸ் படம் வெளியானது. ஆனால், அந்த படத்துக்கு மோசமான விமர்சனங்கள் வெளியான நிலையில், அந்த படம் ஓடவில்லை. ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள அமரன் திரைப்படம் மிஸ்ஸே ஆகாது கன்ஃபார்மாக வெற்றி பெறும் என சிவகார்த்திகேயன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலேயே சொன்னது போலவே படம் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்தவொரு படமும் 150 கோடி வசூலை கடக்காத நிலையில், ராயன் படத்தின் லைஃப் டைம் வசூலை தீபாவளி வீக்கெண்டிலேயே வசூல் செய்து சாதித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

300 கோடி வசூல்: அமரன் திரைப்படம் அதிகபட்சம் 200 கோடி வசூலை அள்ளும் என்றும் அஜித் குமாரின் கடைசி படமான துணிவு படத்தின் வசூல் வேட்டையை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யாவின் கங்குவா படம் வெளியாகும் வரை அமரன் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்றும் இந்த வாரமும் அடுத்த வாரமும் இதே போல படம் ஓடினால் 250 கோடி முதல் 300 கோடி வசூலை லைஃப் டைம் வசூலாக அமரன் அள்ளும் என்கின்றனர்.

100 கோடி சம்பளம்: 300 கோடி ரூபாயை அமரன் படம் ஈட்டினால் விஜய், ரஜினிகாந்த், அஜித்தை தொடர்ந்து 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறிவிடுவார் என்றும் குறைந்தபட்சம் அவரது சம்பளம் 80 கோடி வரை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X