Amaran Trailer: அப்பா பர்த்டேக்கு வருவாரா.. அசால்ட்டு பண்ணும் சிவகார்த்திகேயன்.. அமரன் டிரெய்லர்!

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் அதிரடியான டிரெய்லர் தற்போது வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையன்று சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமாவின் முதல் ஏலியன் திரைப்படம் என்கிற பில்டப்புடன் வெளியான அயலான் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை தரவில்லை.

amaran sivakarthikeyan diwali 2024

ஆனால், மாவீரன் படத்திற்கு பிறகு தரமான சம்பவமாக இந்த அமரன் இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. நாட்டுக்காக வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாகவே இந்த அமரன் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளைமேக்ஸ் அழ வச்சிடும்: அமரன் படத்தின் டிரெய்லர் இறுதியில், "அம்மா அப்பா பர்த்டேவுக்கு வருவாங்கன்னு சொன்னல்ல அப்பா வருவாரா என மேஜர் முகுந்தின் மகள் கேட்கும் காட்சியை பார்க்கும் போதே கண்ணீர் வந்து விடும் அளவுக்கு படத்தின் கிளைமேக்ஸ் இப்படித்தான் சிவகார்த்திகேயன் ரசிகர்களை இந்த தீபாவளிக்கு தியேட்டர்களில் அழவைத்து அனுப்பப் போகிறது என்பதை இப்போதே டிரெய்லர் வழியாக இயக்குநர் காண்பித்துள்ளார்.

amaran sivakarthikeyan diwali 2024

சிவகார்த்திகேயன் சரவெடி: ஒரே மகனாக இருந்தாலும் நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என ஆர்மியில் சேர்ந்து இதுதான் இந்திய ஆர்மி மேனின் முகம் என சொல்லி சுடும் காட்சிகள் என சிவகார்த்திகேயன் தனது நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டப் போகிறார் என்பது டிரெய்லரை பார்த்தாலே புரிந்து விடுகிறது. அமரன் படத்தை சம்மரிலேயே காண ஆசைப்பட்டு காத்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி சரவெடியாக இந்த படம் அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

amaran sivakarthikeyan diwali 2024

துப்பாக்கியை பிடிங்க சிவா: கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கையில் விஜய் சின்ன துப்பாக்கியைத்தான் கொடுத்தார். ஆனால், கமல்ஹாசன் பெரிய ஏகே 47 ரக துப்பாக்கிகளையே கொடுத்து சுட வைத்து அழகு பார்த்துள்ளார். ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் செட் ஆவாரா என கலாய்த்த பலருக்கும் அவரது டெடிகேஷன் மூலமாகவே பதிலடி கொடுத்துள்ளார்.

சாய் பல்லவி செம: மம்மூட்டி என சாய் பல்லவியை சிவகார்த்திகேயன் கலாய்ப்பதும், என்னோட பெயர் ரெபேக்கா வர்கீஸ் என அவர் சொல்வதும் இருவருக்கும் இடையேயான காதல், அன்பு என கெமிஸ்ட்ரியை பக்காவாக வொர்க்கவுட் செய்து நடித்து சாய் பல்லவி தனக்கே உரிய ஸ்டைலில் ஸ்கோர் செய்துள்ளார்.

amaran sivakarthikeyan diwali 2024

ஏகப்பட்ட போட்டி: வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் அமரன், பிரதர், ப்ளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின்றன. இதில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் அமரன் படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் எனக் கூறுகின்றனர். சிறப்புக் காட்சி உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடைத்து வசூல் வேட்டையை அமரன் திரைப்படம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி வசூலை டாக்டர் மற்றும் டான் படங்களை தொடர்ந்து கொடுக்குமா? என்றும் தனுஷின் ராயன் படத்தின் 150 கோடி வசூலை சிவகார்த்திகேயன் கடப்பாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X