உயிருக்குள் நீதானே.. சிவகார்த்திகேயனை வெட்கப்பட வைத்த அதிதி.. சேட்டை புடிச்ச பொண்ணு
சென்னை: பிரமாண்ட இயக்குநர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ஷங்கர். அவரது மகள் அதிதி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அந்தவகையில் அவர் இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது அதிதி செய்த செயல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று புகழப்படுபவர் ஷங்கர். அவர் இயக்கிய ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன் என பல படங்களில் பிரமாண்டத்தை வைப்பவர். அவருக்கு அதிதி என்ற மகள் இருக்கிறார். அடிப்படையில் மருத்துவரான அதிதி ஷங்கர் நன்றாக பாடவும் செய்வார். சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் நடிகையாக அறிமுகமானார். அதன்படி முத்தையா இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார்.

முதல் படமே அசத்தல்: அந்தப் படமும் நன்றாகவே ஹிட்டானது. அதேபோல் அதிதிக்கும் பெரிய பெயரை அந்தப் படம் பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அதிதியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் முதல் படம் போன்றே தெரியவில்லையே; அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறாரே என்று புகழாரம் சூட்டினார்கள். மேலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற மதுர வீரன் அழகுல பாடலையும் அட்டகாசமாக பாடியிருந்தார் அதிதி. அதுவும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனுடன்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார் அதிதி. அதில் பத்திரிகையாளர் வேடத்தை ஏற்று அதனையும் மிகச்சிறப்பாக செய்தார். மேலும் அப்படத்திலும் வண்ணாரப்பேட்டையில என்ற பாடலை சிவாவுடன் இணைந்து பாடியிருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி அதிதியின் கிராஃபை மேற்கொண்டு உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன.
நேசிப்பாயா: அந்தவகையில் விஷ்ணுவர்தன் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் இயக்கும் நேசிப்பாயா என்ற படத்தில் நடித்திருக்கிறார் அதிதி. அதில் முரளியின் இரண்டாவது மகனும், அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கிறார். அதிதி தியா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படமானது மிக விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில்; படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
ட்ரெண்டாகும் வீடியோ: அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் யுவன், விஷ்ணு வர்தன், நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் குறித்து பேசினார். இந்தச் சூழலில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயனும், அதிதியும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். அப்போது நேசிப்பாயா படத்தின் பாடல் ஒலிக்கும்போது சிவகார்த்திகேயனின் கையை பிடித்து ஜாலியாக விளையாடுகிறார். அதனை எதிர்பார்க்காத சிவகார்த்திகேயனும் வெட்கத்தில் சிரிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிதி சேட்டை பிடிச்ச பொண்ணு சார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications