அவர் மட்டும் ஒஸ்தியா?: சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

By Siva

Recommended Video

ஓட்டு போடப் போய் சிவகார்த்திகேயன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

சென்னை: ஓட்டு போடப் போய் சிவகார்த்திகேயன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஓட்டு போடச் சென்றார். வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லாத நிலையிலும் அவர் ஓட்டு போட அனுமதித்துள்ளனர்.

அவரை ஓட்டு போட அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

நடிகர்

நடிகர்

வாக்காளர் பட்டியிலில் சாதாரண மக்களின் பெயர் இல்லை என்றால் வாக்களிக்கவிடவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தார்கள்?. நடிகர் என்றால் ஒஸ்தியா என்று விமர்சனம் எழுந்துள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

இம்முறை லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்று சிவகார்த்திகேயனும், அஜித்தும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். சிவகார்த்திகேயனை எந்த அடிப்படையில் வாக்களிக்க அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித் வரிசையில் நிற்காமல் சென்றதால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

செய்தி

செய்தி

தேர்தல் நாள் அன்று ரஜினிகாந்த், கமல் ஹாஸன், சூர்யா, விஜய், விஜய் சேதுபதி என்று எத்தனையோ திரையுலக பிரபலங்கள் வாக்களித்தனர். ஆனால் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி மட்டும் தான் இன்றும் பேசப்படுகிறது. காரணம் இருவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

ஆதரவு

ஆதரவு

சிவகார்த்திகேயனுக்கும் சரி, அஜித்துக்கும் சரி ரசிகர்கள் ஆதரவாக உள்ளனர். தனது வாக்குரிமையை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன் மீகு குறை சொல்லக் கூடாது என்கிறார்கள் ரசிகர்கள். அஜித் வரிசையில் நிற்காததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவரின் பெருந்தன்மையை பார்க்க வேண்டும். வழக்கமாக வரிசையில் நிற்கும் அவர் இம்முறை நிற்கவில்லை என்றால் ஏதாவது முக்கிய காரணம் இருக்கும் என்கிறார்கள் தல ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X