Don't Miss!
- News
பேரறிவாளன் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி! உடல் நலம் பேண வேண்டும்! அன்புடன் அன்புமணி போட்ட கண்டிஷன்!
- Sports
மீண்டும் ஏதேனும் பிரச்சினையா? குர்னல் பாண்டியாவை வெளியே அனுப்பிய கம்பீர்.. 3 மாற்றம் தேவையா?
- Technology
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- Finance
424 ஊழியர்களை பணிநீக்கம்.. அதிர்ச்சி கொடுத்த பெங்களூர் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!
- Automobiles
மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லவ் யூ ஆல்... வீடியோ மூலம் வாழ்த்து சொன்ன டான் நாயகன்... பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை : புத்தாண்டின் இனிய துவக்கமாக இன்றைய தினம் அமைந்துள்ளது.
இதையொட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
துபாயில்
புத்தாண்டு
கொண்டாட்டம்...
வீடியோ
வெளியிட்ட
விக்னேஷ்
சிவன்
-நயன்
ஜோடி!
நடிகர், சிவகார்த்திகேயன், ஓவியா, ஜீவா உள்ளிட்டவர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு 2022
புத்தாண்டு சிறப்பான துவக்கத்தை தந்துள்ளது. சில பார்ட்டி கொண்டாட்டங்களிலும் சிலர் கோயில்களுக்கு சென்றும் தங்களது புத்தாண்டை துவக்கியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களை கொடுத்த நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் புத்தாண்டை துவக்கியுள்ளனர்.

பிரபலங்கள் வாழ்த்து
இந்நிலையில் புத்தாண்டையொட்டி சினிமா உள்ளிட்ட துறைகளை சார்ந்த பிரபலங்கள் பலர் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ மூலம் தனது புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார். மேலும் லவ் யூ ஆல் என்றும் முடித்துள்ளார்.

நடிகர்கள் வாழ்த்து
இதேபோல நடிகை ஓவியா, ஜெய் உள்ளிட்டவர்களும் புத்தாண்டையொட்டி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதேபோல சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளது.

விஜய் ஆண்டனி வாழ்த்து
இதனிடையே நடிகர் விஜய் ஆன்டனியும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். ஓமிக்ரான் பத்தி கவலைப்படாம உடம்புலயும் மனசுலயும் தெம்பை வளர்த்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். நமக்கு ஒன்றும் ஆகாது என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து
இதேபோல மகான் படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தன்னுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். விரைவில் மகான் படம் ரிலீசாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பீஸ்ட் படத்தின் சமீபத்திய போஸ்டரை வெளியிட்டு நடிகை பூஜா ஹெக்டேவும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

வெங்கட்பிரபு வாழ்த்து
இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மிர்ச்சி சிவா, பிரேம்ஜி உள்ளிட்ட தனது கூட்டணியுடன் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். எப்போதும் கலாட்டா கூட்டணியுடன் காணப்படும் இந்த கேங்க் தற்போதும் உற்சாகத்துடன் உள்ளது.