ஃபுல் ஃபார்மில் சிவகார்த்திகேயன்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறாரா?.. தளபதி 69க்கு ஆபத்து இல்லை

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முகுந்த வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறுதான் அந்தப் படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனும், ஹெச்.வினோத்தும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் மினிமம் கியாரண்டி என்ற உறுதி இருப்பதாலும், வியாபாரமும் கையை கடிக்காமல் நடப்பதாலும் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் இருக்கிறார்கள். மேலும் இப்போது சிறுவர்கள், சிறுமிகள் மத்தியில் சிவகார்த்திகேயன் டாப்பில் இருக்கிறார். எனவே இயக்குநர்களும் சிவாவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார்கள்.

Sivakarthikeyan H Vinoth Thalapathy 69 69

அமரன்: கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதற்கு முன்னதாக வெளியான மாவீரனும் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்த கையோடு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கமல் ஹாசன் தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் சிவாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை பரிசளிக்கும். ஏனெனில் ரங்கூன் படத்தின் மூலமே ராஜ்குமார் பெரியசாமி தான் ஒரு நல்ல இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார்.

எஸ்கே 23: இதற்கிடையே சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. அவர் எடுத்த படங்கள் அத்தனையும் அட்டர் ப்ளாப் ஆகின. அவரது நிலைமையை பார்த்த ரசிகர்கள், அட நம்ம முருகதாஸுக்கா இந்த நிலைமை என பரிதாபத்தில் உச் கொட்டுகிறார்கள். எனவே இப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுக்க முருகதாஸ் காத்திருக்கிறார்.

சிவாவின் கேரக்டர்?: இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதேசமயம் ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், தன்னுடைய கரியரில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு சிங்கநடை என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த படம்: இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் அவர் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தின் ஷுட்டிங்கும் விரைவில் தொடங்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தற்கால தலைமுறை இயக்குநர்களில் பெரிதும் கவனம் ஈர்க்கும் ஹெச்.வினோத்துடன் அவர் ஒரு படத்தில் இணையவிருப்பதாகவும்; மகாராஜா படத்தை தயாரித்த ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 69க்கு ஆபத்து இல்லை: இப்போது இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள்; அய்யோ அப்போ விஜய்யை வைத்து ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக படத்துக்கு ஆபத்தா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். ஆனால், தளபதி 69 படத்தை முடித்துவிட்டுதான் ஹெச்.வினோத் சிவா படத்தை இயக்குவார் என்றும்; அந்த கேப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துமுடித்துவிடுவார் என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X