சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் !

சென்னை : நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பல கோடி இளம் ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டிவி நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் தனது சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் நடிப்பின் மூலம் வெற்றி கொடியை நாட்டி வரும் சிவகார்த்திகேயன் தமிழ்சினிமாவின் இளவரசன் என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இவரின் பல்வேறு மாஸ் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் தற்போது இவர் தனது மனைவி ஆர்த்தியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையாக வசூல்

இணையாக வசூல்

தனது ஒவ்வொரு படங்களின் மூலம் உன்னால் முடியாது எனச் சொல்பவர்களின் முன்னால் படத்திற்கு படம் மாஸ் காட்டி வரும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த கலைஞராக இருந்து வருகிறார். ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்றவர்களின் திரைப்படங்களுக்கு இணையாக வசூல் சாதனை செய்து வரும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் இளவரசன் என அனைவராலும் புகழப்பட்டு வருகிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பாளர்

மெரினா, 3 போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் அதற்கு முன்பு விஜய் டிவியில் மிகவும் பிரபலமான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவ்வாறு தொகுப்பாளராக பணியாற்றும் போதே தனது சிரிக்க வைக்கும் பேச்சின் மூலம் பல ரசிகர்களை பெற்று வந்த சிவகார்த்திகேயன் இயல்பிலேயே அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

மிமிக்ரி செய்து

மிமிக்ரி செய்து

சிறந்த நகைச்சுவையாளர் மற்றும் தொகுப்பாளர் என இருந்து வரும் சிவகார்த்திகேயன் பிரபலமான நடிகர்களைப் போல மிமிக்ரி செய்து காட்டுவதிலும் வல்லவர். இவ்வாறு பல்வேறு திறமைகளை கொண்டு பலதரப்பட்ட மக்களையும் ரசிக்க வைத்து ரசிகர்களாக பெற்று வந்த சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் தற்பொழுது வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குடும்பங்கள் கொண்டாடும்

குடும்பங்கள் கொண்டாடும்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே , எதிர்நீச்சல், ரெமோ என தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் ஹீரோ போன்ற சமூக அக்கறையுள்ள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை சக்கை போடு போட்டு குடும்பங்கள் கொண்டாடும் மிகப்பெரிய படமாக வெற்றி பெற்றது.

உதவிக்கரம் நீட்டி

உதவிக்கரம் நீட்டி

தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது அகிலன், டாக்டர் என பல படங்களில் நடித்து வரும் அதே வேளையில் திரைத்துறையில் வளர்ந்து வரும் பல நடிகர் மற்றும் இயக்குனர்களுக்கு உதவிக்கரம் நீட்டி பல படங்களை தயாரித்தும் வருகிறார்.

சிறுவயது முதல்

சிறுவயது முதல்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த வாழ்க்கையில் நெருங்கிய உறவினரின் மகளான ஆர்த்தி என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சிறுவயது முதலே ஒன்றாக பழகி வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்து தற்பொழுது மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் இவரின் திருமண புகைப்படங்களை மட்டும் பலரும் பார்த்து வந்த நிலையில் தற்பொழுது இதுவரை யாரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தியின் சிறு வயது போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

Sivakarthikeyan adopted White Tiger | Vandalur Zoo, Doctor, Ayalaan
குட்டி எஸ்கே-வை

குட்டி எஸ்கே-வை

இவ்வாறு தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டும் பார்த்து வந்த சிவகார்த்திகேயனை ரசிகர்கள் குட்டி பையனாக இருக்கும் குட்டி எஸ்கே-வை பார்த்து ரசித்து அதை இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர். இந்த போட்டோவில் முன் சீட்டில் ஒரு குழந்தையை கையில் வைத்தபடி எஸ்கே-வும், அவருக்கு அப்படியே நேர் பின் சீட்டில் ஆர்த்தியும் குடும்பத்துடன் இருக்கிறார். இந்த சிறு வயதில் போட்டோ இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X