நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா?.. சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் பிரச்சனையா?.. அருண்விஜய் விளக்கம்!
சென்னை : சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று அருண்விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
விஜயகுமாரின் மகனான அருண்விஜய், மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி உள்ளார்.
பார்டர், அக்னிசிறகுகள், பாக்ஸர், சினம்,யானை திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இதில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி உள்ள யானை வரும் 17ந் தேதி வெளியாக உள்ளது.

நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா?
நடிகர் அருண் விஜய்க்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் வெளியான போது, நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயனின் புகைப்படத்தை பகிர்ந்து நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் என்கிற விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பாங்க என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜய்யை திட்டி கமெண்டுகளை பதிவிட்டனர்.

தவறாக நினைக்க வேண்டாம்
இந்த மீம்ஸ் குறித்து விளக்கம் அளித்த, அருண்விஜய், அது நான் போட்ட பதிவு அல்ல, என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது தான் அது சரி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகையால், அந்த பதிவினை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். இருப்பினும் இதை நம்பாமல் அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சானை இருக்கு என்றே ரசிகர்கள் பேசிவந்தனர்.

வாழ்த்திற்கு நன்றி
அருண்விஜய் நடிப்பில் வெளியாக யானை திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் ,படம் வெற்றி பெறவாழ்த்தும் தெரிவித்து இருந்தார். அதேபோல, அருண் விஜய் மகன் அர்னவ் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அருண் விஜய், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி விஜய் அர்னவ்விற்கு உங்கள் வாழ்த்தை தெரிவிக்கிறேன்என்று பதில் அளித்து இருந்தார்

நீங்கள் தான் பிரச்சனை
யானை படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அருண் விஜய்யிடம் , சிவகார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அருண் விஜய், எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சக நடிகர்கள் தான். நீங்கள் தான் பிரச்சனை இருப்பதாக கூறி அதை பரப்பி விடுகிறீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











