சிவகார்த்திகேயனும் பிரியங்கா மோகனும் ‘பிரைவேட் பார்ட்டி’ பண்றாங்களாம்.. எங்கே போய் முடியப் போகுதோ!

சென்னை: சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் என்னம்மா பிரைவேட் பார்ட்டி பண்றாங்கன்னு டான் படத்தின் மூன்றாவது சிங்கிளை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா மோகன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்திலும் அவர் தான் ஹீரோயின்.

காப்பாற்றுகிறாரா ஏமாற்றுகிறாரா

காப்பாற்றுகிறாரா ஏமாற்றுகிறாரா

கோலிவுட் திரைப்படங்களில் திரைக்கதை சிறப்பாக இல்லை என்றாலும், அனிருத் இசையில் வெளியாகும் அத்தனை பாடல்களும் ஹிட் ஆகி படத்திற்கு மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கி விடுகிறது. தமிழ் சினிமாவை தற்போது காப்பாற்றும் கடவுளாகவே அனிருத் தான் உள்ளார் என்றும் கூறுகின்றனர். சிலர், அனிருத் நல்லா நம்மளை ஏமாற்றி மொக்கைப் படங்களை பார்க்க வைத்து விடுகிறார் என்றும் கூறுகின்றனர்.

பிரைவேட் பார்ட்டி

பிரைவேட் பார்ட்டி

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்திற்கு ஏற்கனவே அனிருத் இசையமைத்த ஜலபுலஜங் மற்றும் பே பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்தன. இந்நிலையில், மூன்றாவது சிங்கிளாக பிரைவேட் பார்ட்டி எனும் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் க்ளிம்ஸ் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

அடுத்த அரபிக் குத்தா

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகி உள்ள இந்த பிரைவேட் பார்ட்டி பாடல் அடுத்த அரபிக் குத்து பாடல் அளவுக்கு ஹிட் அடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாடலில் சிவகார்த்திகேயன் செம டான்ஸ் ஆடியிருப்பது தற்போது வெளியான சில நொடி பாடல் காட்சிகள் மூலமாகவே தெரிகிறது.

கலக்கும் செல்லம்மா

கலக்கும் செல்லம்மா

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா மோகன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் டான் மற்றும் தலைவர் 169 என அடுத்தடுத்து பெரிய படங்களில் புக் ஆகி கலக்கி வருகிறார்.

ஹிட் அடிக்குமா

ஹிட் அடிக்குமா

ஜனவரி முதல் ஏப்ரல் வரை இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கி உள்ளது. இந்நிலையில், டாக்டர் படத்தை போல சிவகார்த்திகேயனுக்கும் கோலிவுட்டுக்கும் ஒரு சூப்பர் ஹிட்டான படமாக டான் அமையுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் மே 13ம் தேதி டான் ரிலீசாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X