போன வருஷம் மீனா.. இந்த வருஷம் பாஜக பொங்கலுக்கு எல். முருகன் யாரை கூட்டிட்டு போயிருக்காரு பாருங்க!

சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பராசக்தி பட நடிகர்களான சிவகார்த்திகேயன், ரவி மோகன் கலந்து கொண்டனர். அந்த போட்டோ இணையத்தில் வெளியாகி பேசு பொருளாகி உள்ளது.

பல வெற்றிப்படங்களை கொடுத்த சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன்,குரு சோமசுந்தரம், ராணா டகுபதி, பசில் ஜோசப், தேவ் ராம்நாத் ஆகியோர் நடித்த பராசக்தி திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி தியேட்டரில் வெளியாகிய கலமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.27கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் 1960 காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் இந்திரா காந்தியின் கதாபாத்திரம் வில்லியாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு மூர்க்கத்தனமான மோசமான கதாபாத்திரமாக படத்தில் பயன்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டி வருகின்றனர்.

pongal Sivakarthikeyan Ravi Mohan

மோடி பொங்கல்: அது மட்டும் இல்லாமல், மறைந்த திமுக தலைவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் மாணவர்களின் இந்திய எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கும் காட்சிகளும் படத்தில இடம்பெற்றுள்ளன. இதனால், பராசக்தி படம் திமுகவை ஆதரிக்கும் படமாக இருப்பதாக இணையத்தில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மத்திய இணையமைச்சர் எல் முருகன் இல்ல பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், பாடகி கெனிஷா ஆகியோர் பங்கேற்று உள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் பராசக்தி பட நடிகர் கலந்து கொண்டது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலா மாஸ்டர், நடிகை மீனா கலந்து கொண்ட சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், இந்த பொங்கல் பண்டிகைக்கு அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசுவதற்கு நல்ல ஒரு கன்டென்ட் கிடைத்துள்ளது. இது எங்கே எல்லாம் போகக்போகிறது என்பதை அமைதியாக காத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X